Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும்? துலாம் முதல் மீனம் வரை

    இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும்? துலாம் முதல் மீனம் வரை

    துலாம்:

    சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு கடந்த ஆண்டுடன் அஷ்டம சனி முடிவுற்றதால் இனி நன்மைகள் அதிக அளவில் நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. திருமண யோகம் கைக்கூடி வரும். மனதிற்கு பிடித்த வாழ்க்கைத் துணை அமைய போகும் நல்ல நேரம். பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் விரும்பிய வேலை நிச்சயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. 

    விருச்சிகம்: 

    செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் மன நிறைவும் நிறைந்த ஆண்டாக இந்த ஆண்டு அமையும். இனி உங்களுக்கு பிரச்சனைகள் இன்றி நன்மைகளாக நடக்கப்போகிறது. குடும்ப ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. செலவுகள் அதிகரித்தாலும் பணவரவில் எந்த குறைவும் இருக்காது. பெண்களுக்கு அவர்கள் விரும்பும் ஆண் துணை கிடைப்பர். 

    தனுசு: 

    குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நன்மைகள் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுடன் ஏழரை சனி முடிவுக்கு வர உள்ளதால், இனி வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிக்கும் நிலை உருவாகும். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. 

    மகரம்: 

    சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மன மகிழ்ச்சி அளிக்கும். இதுவரை தடைபட்டு வந்த திருமண பேச்சு வார்த்தைகள் அனைத்தும் நல்ல காரியங்களாக முடியும். உடல் உபாதைகள் நீங்கி தெளிவு பிறக்கும். பாத சனி காலம் என்பதால் இந்த ஆண்டு கால் பாதங்களில் நோய்த்தொற்று அண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வேலைக்காக முயற்சி செய்து வந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

    கும்பம்: 

    சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு கடினமான சூழ்நிலை வந்தாலும் அதை சாதித்து காட்டக்கூடிய உத்வேகம் பிறக்கும். நல்ல வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். குருவின் கருணையால் தற்போது திருமண காரியங்கள் நல்லபடியாக முடியும். 

    மீனம்: 

    குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நன்மைகள் நடைபெறும் ஆண்டாக இருக்கும். திருமணத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் இப்போது ஒரு முடிவுக்கு வந்து சுமூகமாக முடியும். வேலையில் சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். இருப்பினும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதே சமயம் அதில் கவனம் தேவை. 

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....