Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும்? மேஷம் முதல் கன்னி வரை

    இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும்? மேஷம் முதல் கன்னி வரை

    மேஷம்: 

    செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நன்மைகள் அதிக அளவில் நடைபெறும் ஆண்டாக அமைகிறது. உங்கள் ரயில் புத்தாண்டு பிறப்பதால் நீங்கள் எதிர்பார்த்திராத நன்மைகள் நடைபெறும். திருமண காரியங்கள் வெற்றிகரமாக முடியும். திடீர் பணவரவு இருக்கும். நல்ல வேலையும் தொழிலும் அமையும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். 

    ரிஷபம்: 

    சுக்கிர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நன்மைகள் நடைபெறும் நல்ல ஆண்டாக இருக்கிறது. இதுவரை வாழ்க்கையில் பிரச்சனை என்று நினைத்தது அனைத்தும் பறந்தோடி போகும். குடும்பத்தில் இருந்த வந்த சிக்கல்கள் இனி தீர்ந்துவிடும். செய்யும் வேளையிலும் தொழிலிலும் கவனமுடன் இருப்பது அவசியம். தொழிலை விரிவுபடுத்துவதற்கு ஏற்ற நேரம் இது. திருமண பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடியும். 

    மிதுனம்: 

    புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு, இந்த ஆண்டு பிரச்சனைகள் தீரும் ஆண்டாக இருக்கிறது. உறவுகளுக்கிடையே மகிழ்ச்சியும் பாசமும் அதிகரிக்கும். திருமண காரியங்கள் கைக்கூடும் வரும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய வேலை கிடைக்கும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். 

    கடகம்: 

    சந்திர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சற்று கவனமுடன் இருக்க வேண்டிய ஆண்டாக இருக்கும். அஷ்டம சனி உங்களுக்கு சில சிரமங்களை தரும். வாகனங்களில் பயணிக்கும் பொழுது சற்று கவனமாக செல்ல வேண்டும். இருப்பினும் குருபகவான் தடைகளைத் தாண்டி உங்களை வெற்றி பெற வைப்பார். நீங்கள் செய்யும் செயல்களில் தெளிவு வேண்டும். 

    சிம்மம்: 

    சூரிய பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காக்கிரகளுக்கு இந்த ஆண்டு நன்மைகள் நடைபெறும் நல்ல ஆண்டாக அமைகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிடுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றமும் அதன் காரணமாக லாபமும் அதிகமாகும். கண்டச்சனி நடைபெறுவதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமணம் கூடிய சீக்கிரத்தில் நிச்சயம் ஆகும். 

    கன்னி: 

    புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த ஆண்டு உங்களுக்கு பிரச்சனைகள் முடிவுக்கு வரும் நல்ல ஆண்டாக அமைகிறது. காதலித்து வந்த கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நிச்சயமாகும். குடும்பத்தில் இருந்த வந்த கடன் பிரச்சனைகள் ஒழியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குரு உங்களுக்கு கேட்டதை கொடுக்கப் போகும் நல்ல நேரம் ஆரம்பம் ஆகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....