Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்உழவர் நலத்துறையின் சார்பில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகள்; கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர்

    உழவர் நலத்துறையின் சார்பில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகள்; கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர்

    விவசாயிகளின் நலனுக்காக ரூ.15.40 கோடி செலவில் வேளாண் கட்டடங்கள், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் விநியோகம், நெல்லுக்கு பின் பயறு சாகுபடி திட்டத்தின் கீழ் பயறு விதைகள் விநியோகம், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகள் மற்றும் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.12.2022) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.15.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளையும், நெல்லுக்கு பின் பயறு சாகுபடி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயறு விதைகளையும் வழங்கினார். மேலும், வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு, கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒன்றிய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதார விலையை காட்டிலும் கூடுதலாக டன்னுக்கு ரூ.195/- சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கி, 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    1.21 இலட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் அவர்கள் இன்று 2 கரும்பு விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

    இருபது நடமாடும் காய்கனி அங்காடிகள்,

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் சார்பில் கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் பொருட்டு 40 இலட்சம் ரூபாய் மதிப்பில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, முதன்மைச் செயலாளர் / சர்க்கரைத்துறை ஆணையர் சி.விஜயராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    5 குடிசை வீடுகளில் திடீரென பற்றிய தீ! பதட்டமான ராமாபுரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....