Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்நகர் ஊரமைப்பு இயக்கத்தில் 27 உதவி இயக்குநர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை; வழங்கினார் முதலமைச்சர்...

    நகர் ஊரமைப்பு இயக்கத்தில் 27 உதவி இயக்குநர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை; வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    நகர் ஊரமைப்பு இயக்கத்தில் 27 உதவி இயக்குநர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.12.2022) தலைமைச் செயலகத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 27 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

    மாவட்ட அலுவலகங்களில் நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர்களால் முழுமைத்திட்டப்பணிகள், விரிவு அபிவிருத்தி திட்டப் பணிகள், குடியிருப்பு மற்றும் வணிக அபிவிருத்திகளுக்கு திட்ட அனுமதி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நகர் ஊரமைப்பு இயக்கக உதவி இயக்குநர் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில், 27 உதவி இயக்குநர் காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார். 2009 ஆம் ஆண்டுக்குப்பின்னர் தற்போது 27 உதவி இயக்குநர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகின்றன.

    இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப, நகர் ஊரமைப்பு இயக்குநர் திரு. பா.கணேசன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; 10 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு குழு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....