Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமூன்று மாதமாக பாலியல் வன்கொடுமை - இந்தியாவில் தொடரும் அவலம்

    மூன்று மாதமாக பாலியல் வன்கொடுமை – இந்தியாவில் தொடரும் அவலம்

    ஜார்கண்டில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

    ஜார்கண்ட் மாநிலத்தின் பொகாரோ நகரில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஏப்ரல் 19-ம் தேதி கடைக்குச் சென்றுள்ளார். ஆனால், கடைக்குச் சென்ற மாணவி வீட்டுக்கு வரவில்லை.

    இதைத் தொடர்ந்து,  அம்மாணவியின் பெற்றோர் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி மகளிர் காவல்நிலையத்தில் மாணவி காணாமல் போனதாக புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மாணவியை தேடும் பணியையும் பெற்றோர்கள் நடத்தியுள்ளனர். 

    இந்நிலையில், காணாமல் போன மாணவி கடத்தப்பட்டு, பூட்டிய அறைக்குள் மூன்று பேரால் கடந்த 3 மாதங்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். 

    மேலும், மூன்று பேரும் வெளியே செல்லும் போது மாணவியின் வாய் மற்றும் கையை துணியால் கட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

    இந்நிலையில், கடந்த ஜூலை 19-ம் தேதி, அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண் இதனை கவனித்துள்ளார். அவர் அந்த வீட்டைத் திறந்து மாணவியையும் காப்பாற்றியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டப் பெண் அங்கிருந்து தப்பி, பெற்றோரிடம் வந்துள்ளார். நடந்ததை அறிந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

    இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் குல்தீப் குமார் கூறியதாவது :

    மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட பிறகு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறும்.

    இவ்வாறு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    தில்லி: ரயில்வே நிலையத்தில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....