Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஊழல் புகார்: போக்குவரத்து துணை ஆணையர் பணியிடை நீக்கம்

    ஊழல் புகார்: போக்குவரத்து துணை ஆணையர் பணியிடை நீக்கம்

    ஊழல் புகாரில் சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

    சென்னை துணை போக்குவரத்து ஆணையரகத்தில், ஆணையராக பணியாற்றி வருபவர் நடராஜன். இவர் தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர்களிடம் பதவி உயர்வுக்காக லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    அதன்படி, துணை போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.35 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினர். 

    இதைத் தொடர்ந்து போக்குவரத்து துறையின் துணை ஆணையர் நடராஜன், நெல்லைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இனி போக்குவரத்து சிக்னலின்போது உங்கள் காதுகளில் இசை பாயும் 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....