Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாடியூசன் போனது குத்தமா? 16 வயது சிறுவனுக்கு 34 வயது டியூசன் டீச்சர் செய்த பாலியல்...

    டியூசன் போனது குத்தமா? 16 வயது சிறுவனுக்கு 34 வயது டியூசன் டீச்சர் செய்த பாலியல் வன்கொடுமை

    11 வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 34 வயதுடைய டியூஷன் டீச்சர் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததால், தற்போது அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

    கேரள மாநிலம், திரிச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 16 வயதுடைய சிறுவன். இவன் 11 வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் இவனது நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். 

    இதைத்தொடர்ந்து, அந்த மாணவனை அழைத்து ஆசிரியைகள் விசாரித்துள்ளனர். மேலும் அவனுக்கு மனநல ஆலோசனையும் வழங்கியுள்ளனர். அப்போது தான் பல உண்மைகள் வெளி வந்துள்ளன. டியூஷன் ஆசிரியை தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அம்மாணவன் தெரிவித்துள்ளான். 

    இதனை அவர்கள் பெற்றோரிடம் கூறியதை அடுத்து, அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அந்த டியூஷன் ஆசிரியையை கைது செய்தனர். 

    இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில், அந்த மாணவன் கொரோனா காலகட்டத்தில் அருகில் உள்ள டியூஷனில் சேர்ந்து படித்து வந்ததாகவும். அந்த டியூஷன் ஆசியையை முதலில் ஜிம்மில் பயிற்சியாளராக இருந்து வந்ததாகவும், பிறகு கொரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டிலேயே டியூஷன் எடுத்து வந்ததாகவும் தெரிவித்தனர். 

    மேலும் அந்தப் பெண் தனது கணவனை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், அந்த சமயம் அங்கு டியூஷன் படிக்க வந்த 16 வயதான பள்ளி மாணவனுக்கு அவர் மதுக்கொடுத்துவிட்டு, அவனை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளனர். இதேபோன்று பல முறை அந்த மாணவனுக்கு வன்கொடுமை செய்துள்ளார் அந்த பெண் என்றும் தெரிவித்தனர். 

    பாதிக்கப்பட்ட அந்த மாணவன் தற்போது மனநல சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். அந்தபெண் கடந்த மாதம் 28 ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    இதையும் படிங்க: தயவு செய்து மூடுங்க? டாஸ்மாக் ஊழியர்கள் காலில் விழுந்த பாமக எம்.எல்.ஏ – பதறிப்போன மக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....