Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு"சூர்யகுமார் ஆட்டம் கொண்டாட்டமானது": புகழ்ந்து தள்ளிய வாசிம் அக்ரம்..!

    “சூர்யகுமார் ஆட்டம் கொண்டாட்டமானது”: புகழ்ந்து தள்ளிய வாசிம் அக்ரம்..!

    சூர்யகுமார் யாதவ் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.

    2021-ம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் அறிமுகமானார். இதுவரையில் 37 ஆட்டங்களில் விளையாடி, 1 சதத்தையும், 12 அரைசதங்களையும் விளாசினார்.

    இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணியில், சூர்யகுமார் யாதவ் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். 

    கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் கூட சூர்யகுமார் யாதவ் மிகச்சிறப்பாக விளையாடி 61 ரன்கள் விளாசினார்.

    இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் புகழ்ந்து பேசியுள்ளார். தனியார் தொலைகாட்சி ஒன்றில் பங்கேற்ற வாசிம் அக்ரம், சூர்யகுமார் யாதவ் வெறொரு கிரகத்தில் இருந்து வந்திருப்பதாக நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.  

    மேலும், சூர்யகுமார் யாதவ் அனைவரையும் விட முழுமையாக வித்தியாசமானவர் என்றும், ஜிம்பாப்வேக்கு எதிராக மட்டுமல்ல உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் அடித்த ரன்களை பார்க்கும்போது அவரது ஆட்டம் கொண்டாட்டமானது என்றும்  வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 

    முன்னதாக, சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட தரவரிசைப்பட்டியலில் சூர்யகுமார் யாதவ் பேட்டர் பிரிவில் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: இலங்கை கிரிக்கெட் வீரர்… பலாத்கார விவகாரம் ? ஆஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....