Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழிசை ஒரு எல்.கே.ஜி? முரசொலி படிக்க கூடிய பத்திரிகையே இல்ல.. மாறி மாறி சரியான அட்டாக்!

    தமிழிசை ஒரு எல்.கே.ஜி? முரசொலி படிக்க கூடிய பத்திரிகையே இல்ல.. மாறி மாறி சரியான அட்டாக்!

    மருத்துவம் படித்திருந்தாலும் தமிழிசை எல்.கே.ஜிதான் என்று முரசொலி கூறிய விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக தமிழிசை முரசொலி படிப்பதற்கு உரிய நாளிதழே இல்லை என்று எதிர்வினையாற்றி தனது கண்டனக்குரலை பதிவு செய்துள்ளார். 

    திமுக அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற முனைப்புடன், கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து, கையொப்பம் இட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. 

    இதனிடையே, இதற்கு தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்து, இது ஜனநாயகத்திற்கு எதிரானது என குறிப்பிட்டிருந்தார். 

    இதைத்தொடர்ந்து,மற்ற மாநில ஆளுநராக இருந்துகொண்டு தமிழிசை, தமிழ்நாடு விவகாரம் குறித்து கருத்து கூறுவதை விமர்சிக்கும் வண்ணமாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் கட்டுரை ஒன்று வெளியானது. 

    அந்தக் கட்டுரையில், ஆளுநர்களே.. எரிமலையோடு விளையாடாதீர்கள் என்ற தலைப்புடன் ‘தமிழ்நாட்டு ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையேயுள்ள பிரச்னையில் தமிழிசை, அவரது கூற்றுப்படி மூக்கை, உடம்பை, வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதற்கு தமிழிசை, ‘எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. சிலந்திகள் சிங்கங்களை என்ன செய்துவிட முடியும்’ என மறு விமர்சனம் செய்திருந்தார். இதற்கு முரசொலி நாளிதழில் கேள்வி-பகுதி என்ற பகுதி ஒன்று வெளிவந்துள்ளது. 

    அதில் முரசொலியும் தமிழிசையும் தொடர்ந்து மோதல் விமர்சனங்களை அடுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் அதி கனமழை: வானிலை ஆய்வு மையம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....