Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசொகுசு வீடு விவகாரம்....கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு நோட்டீஸ்

    சொகுசு வீடு விவகாரம்….கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு நோட்டீஸ்

    இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு கோவா சுற்றுலாத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

    இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத பல பெயர்களில் முக்கியமான பெயர், யுவராஜ் சிங். இந்தியா பல போட்டிகளில் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தவர் இவர். 

    குறிப்பாக, யுவராஜ் சிங் 2007-ஆம் ஆண்டு நிகழ்த்திய நிகழ்வை கிரிக்கெட் ரசிகர்கள் எவராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட் ஓவரில் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை செய்து அசத்தினார். இன்றுவரை, இவரின் இந்த சாதனையை உலகம் வியந்து வருகிறது. 

    பல சாதனைகளை யுவராஜ் சிங், கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் அவர் விலகினார்.

    இந்நிலையில், கோவா அரசு யுவராஜ்சிங்கை டிசம்பர் 8-ஆம் தேதி சுற்றுலாத்துறை இயக்குநரகத்தில் நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

    என்ன நடந்தது?

    பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த யுவராஜ் சிங் கோவா மாநிலத்தில் மோரிஜிம் அருகே வர்ச்சவாடாவில் காசா சிங் என்றொரு சொகுசு வீட்டினை வாங்கியுள்ளார். 

    இவர் தனது சொகுசு வீட்டை வாடகைக்கு விட்டுள்ள யுவராஜ் சிங் அதை அம்மாநில சுற்றுலாத்துறையிடம் முறையாக பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கோவா மாநிலத்தின் சுற்றுலாத்துறை இணை இயக்குநர் ராஜேஷ் காலே யுவராஜ் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    அதன்படி,  டிசம்பர் 8-ஆம் தேதி யுவராஜ் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் தரவேண்டும் என்று கோவா சுற்றுலாத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், யுவராஜ் சிங் ஆஜராகி முறையாக விளக்கம் தரவில்லை எனில் விதிமீறல் குற்றத்திற்காக அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ”யோவ்…பிரஷர் போடாதயா’’ – வாரிசு பட இசையமைப்பாளர் ட்விட்டரில் கலகல பதிவு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....