Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்”யோவ்...பிரஷர் போடாதயா’’ - வாரிசு பட இசையமைப்பாளர் ட்விட்டரில் கலகல பதிவு..

    ”யோவ்…பிரஷர் போடாதயா’’ – வாரிசு பட இசையமைப்பாளர் ட்விட்டரில் கலகல பதிவு..

    வாரிசு திரைப்படத்தின் அடுத்த பாடலுக்கு வேற லெவலில் நடனம் தயாராகியுள்ளதாக நடன இயக்குநர் ஜானி தெரிவித்துள்ளார்.

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், வாரிசு. ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஷ்யாம் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளங்களே நடித்திருக்கும் இத்திரைப்படத்தை, பிரபல இயக்குநர் வம்சி இயக்குகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். 

    வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, திரைப்பட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமன் இசையில் உருவாகிவரும், வாரிசு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் ‘ரஞ்சிதமே’ பாடல் வெளிவந்து யூடியூப் தளத்திலும், ரீல்ஸ்களிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. யூடியூப் தளத்தில் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

    இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் அடுத்த பாடலுக்கு வேற லெவலில் நடனம் தயாராகியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, வாரிசு திரைப்படத்தின் இசையமைப்பாளர், தமன்..”யோவ் ஜானி..பிரஷர் போடாதயா’’ என்று தெரிவித்துள்ளார்.

    இவர்களின் இந்த ட்விட்டுகள் தற்போது சமூகவலைதளத்தில் டிரெண்டாகி உள்ளது. முன்னதாக வெளிவந்த ‘ரஞ்சிதமே’ பாடலுக்கும் ஜானி மாஸ்டர்தான் நடன இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடுமையான சரிவில் ஆண்களின் விந்தணு…வெளிவந்த திடுக்கிடும் ரிப்போர்ட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....