Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதுண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவேன்! 2020 ஆம் ஆண்டே அப்தாப் மிரட்டியதாக ஷ்ரத்தா கொடுத்த புகார்...

    துண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவேன்! 2020 ஆம் ஆண்டே அப்தாப் மிரட்டியதாக ஷ்ரத்தா கொடுத்த புகார்…

    துண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவேன் என அப்தாப் மிரட்டியதாக ஷ்ரத்தா தனது கையப்பட எழுதி புகார் அளித்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக அப்தாப் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஷ்ரத்தாவை கொன்று 35 துண்டுகளாக வெட்டி அதை தில்லியின் பல பகுதிகளில் வீசியது குற்றவாளி அப்தாப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், ஒரு மோசமான சண்டையின் போது ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாகவும் அப்தாப் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார். 

    இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஷ்ரத்தாவில் எழுதப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த ஆறு மாதங்களாக அப்தாப் தன்னை துன்புறுத்தி வந்ததாகவும், ஆனால் காவல்நிலையம் சென்று புகார் அளிக்க தனக்கு தைரியம் இல்லை என்றும் வெகு விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  மேலும் தனக்கு ஏதேனும் நேர்ந்தால் யாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பது தொடங்கி, அவரை கொலை செய்ய நினைப்பது அப்தாப்பின் குடும்பத்தினருக்கு தெரியும் என்றும், தன்னை அடித்து துன்புறுத்துவதையும், அவர்கள் அறிவார்கள் என்றும் ஷ்ரத்தாவின் புகாரில் இருக்கிறது. 

    இந்தப் புகார் ஷ்ரத்தா தனது பக்கத்துவீட்டு நபருடன் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

    ஏற்கனவே அப்தாப் குடும்பத்தினர் காவல்துறையிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது 2020 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஷ்ரத்தாவின் புகார் கிடைத்துள்ளதால், மீண்டும் அப்தாப் குடும்பத்தினர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் நேற்று அப்தாப்பிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டதாகவும், அதன் முடிவுகள் ஒரு வாரத்திற்குள் காவல்துறையிடம் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....