Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க உத்தரவு- ஆவின் நிர்வாகம்

    ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க உத்தரவு- ஆவின் நிர்வாகம்

    ஆரஞ்சு நிற ஆவின் உறையில் விற்கப்படும் பாலை வாங்கி, வணிகரீதியாக விற்பதை தவிர்க்க, குடும்ப அட்டையை ஆவின் மாதாந்திர அட்டையுடன் புதுப்பித்தல், இணைத்தல் பணி தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்(ஆவின்) ஈடுபட்டு வருகிறது.
    ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 40 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீல நிற உறைகளில் (பாக்கெட்டுகளில்) அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.

    ஆவின்பால் கொள்முதல் விலை உயர்த்தியை தொடர்ந்து, ஆவின் ஆரஞ்சு பாக்கெட் பால் சில்லறை விலை ரூ.48ல் இருந்து ரூ.60க்கும், சிகப்பு பாக்கெட் ஆவின் பால் ரூ.60ல் இருந்து ரூ.76க்கும் உயர்த்தப்பட்டது.அதேநேரத்தில், மாதாந்திர அட்டை தாரர்களுக்கு ரூ.46க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து, ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை சிலர் மாதாந்திர அட்டையில் வாங்கி வணிக ரீதியாக விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

    இந்நிலையில், ஆரஞ்சு நிற பாக்கெட் ஆவின் பாலை வணிகரீதியாக வாங்குவதை தவிர்க்க, ஆவின் மாதாந்திர அட்டையுடன் குடும்ப அட்டையை (ரேசன் கார்டு) சரிபார்ப்பது, இணைப்பதை ஆவின் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

    ஆரஞ்சு நிற பாக்கெட் பால் பொருத்தவரை தினசரி சுமார் 6 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஒரு லட்சம் லிட்டர் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, புதியதாக மாதாந்திர அட்டைதாரர்கள் இணைவது அதிகரித்துள்ளன. எனவே, ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை மொத்தமாக வாங்கி, வணிகரீதியாக விற்பதை தவிர்க்க குடும்ப அட்டையை ஆவின் பால் மாதாந்திர அட்டையுடன் சரிபார்த்து புதுப்பித்தல், இணைத்தல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆவின் மேலாண்மை இயக்குநர் ந.சுப்பையன் கூறுகையில்,” மாதாந்திர அட்டைதாரர்களை மாதாந்தோறும் 1-ம் தேதி முதல் 5- ம் தேதி வரை மாதாந்திர அட்டையை குடும்ப அட்டையுடன் சரிபார்த்து, புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்தப்பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 27 மண்டலங்களில் இணையதளம் மூலமாக குடும்ப அட்டையை ஆவின் மாதாந்திர அட்டையுடன் சரிபார்த்து புதுப்பித்தல், இணைத்தல் நடைபெறுகிறது. இதன் மூலம், முறைகேடுகள் தவிர்க்க முடியும். மாதாந்திர அட்டைதாரர்களுக்கான சலுகையை மற்றவர்கள் வணிக நோக்கில் பயன்படுத்துவது தவிர்க்கப்படும்” என்றார்.

    கிறிஸ்த்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்காக அறிமுகமாகும் கேக்! ஆவின் நிர்வாகத்தின் புதிய முயற்சி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....