Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகலைநிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்குகிறது டபிள்யுபில்..

    கலைநிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்குகிறது டபிள்யுபில்..

    பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டபிள்யுபில் தொடரின் முதல் போட்டி மற்றும் தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. 

    மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் பலவித முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஒன்றாக மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டை முன்னெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கடந்த ஆண்டு முடிவு செய்தது. 

    இதைத்தொடர்ந்து, மகளிர் ஐபிஎல் தொடர் குறித்த அறிவிப்புகள் வெளியானது. அதன்படி, டபிள்யுபில் என்று மகளிர் ஐபிஎல் தொடருக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இத்தொடரில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னௌ ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. 

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்மன்ப்ரீத் கௌர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மிருதி மந்தனா பெங்களூரு அணிக்கும், மெக் லேனிங் டில்லி கேபிடல்ஸ் அணிக்கும், பெத்மூனி குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கும், அலிஸா ஹீலி யுபி வாரியர்ஸ் அணிக்கும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த டபிள்யுபில் தொடரில் மொத்தம் 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. லீக் கட்டத்தில் ஒவ்வொரு அணியும் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றைத் தொடர்ந்து மார்ச் 24-இல் எலிமினேட்டர் ஆட்டமும், 26-இல் இறுதி ஆட்டமும் நடைபெறும்.

    பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டபிள்யுபில் தொடரின் முதல் போட்டி மற்றும் தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. மும்பை இந்தியன்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் முதல் போட்டி இன்று நவி மும்பை டிஓய் பாட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. 

    மேலும், இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கும் தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் கியாரா அத்வானி, கிர்த்தி சனோன், பாடகர் ஏபி தில்லான் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனர். அதோடு டபிள்யுபிஎல் கீதத்தை பாடகர் சங்கர் மகாதேவன் பாடுகிறார். 

    கத்தியால் குத்திய தமிழர்; சுட்டுக்கொன்ற காவல்துறை – ஆஸ்திரேலியாவில் அசம்பாவிதம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....