Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'நான் தெருவில் இருந்து வந்தவன்' - வாரிசு படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியானது...

    ‘நான் தெருவில் இருந்து வந்தவன்’ – வாரிசு படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியானது…

    விஜய்யின் வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை அமேசான் பிரைம் நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி வெளியான படம், வாரிசு. வம்சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ராஷ்மிக மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். 

    தில் ராஜூ தயாரித்த வாரிசு படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரிதியாக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 330 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிசு படம் அள்ளியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

    இந்நிலையில், வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை அமேசான் பிரைம் நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இக்காட்சி தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. 

    மேலும், வாரிசு படத்தின் நீளம் கருதி படத்திலிருந்து பல காட்சிகள் படக்குழுவால்  நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....