Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கத்தியால் குத்திய தமிழர்; சுட்டுக்கொன்ற காவல்துறை - ஆஸ்திரேலியாவில் அசம்பாவிதம்!

    கத்தியால் குத்திய தமிழர்; சுட்டுக்கொன்ற காவல்துறை – ஆஸ்திரேலியாவில் அசம்பாவிதம்!

    ஆஸ்திரேலியாவில் வேறுவழியில்லாத காரணத்தினாலேயே தமிழர் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் உள்ளது அபர்ன் ரயில் நிலையம். இந்நலையத்தில் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தூய்மைப் பணியாளர் ஒருவரை கத்தியால் குத்திய வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரகமத்துல்லா சையது அகமது என்பவர் அந்நாட்டு காவல்துறையால் சுடப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் உயிரிழந்தார்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா காவல்துறையிடம் இச்சம்பவம் குறித்து அந்நாட்டு ஊடகங்கள் விளக்கம் கேட்டிருந்தன. இந்நிலையில், தற்போது இச்சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

    கத்தியால் குத்திய முகமது ரகமத்துல்லா சையது அகமதுவை பிடிக்க காவல்துறை அதிகாரிகள் முயன்றுள்ளனர். ஆனால், காவல்துறை அதிகாரிகளையும் அவர் குத்திவிடுவதாக கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

    இதையடுத்து, வேறு வழியில்லாமல் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் முகமது ரகமத்துல்லா சையது அகமதுவை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் அவர் சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு ரயில் நிலையத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் ரகமத்துல்லா இறந்துவிட்டார்.

    வேறுவழியில்லாத காரணத்தினாலேயே துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது. இருப்பினுமு, இது குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு தெரிவித்தனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....