Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்முன்னாள் காதலனை பழிவாங்க காதலி செய்த செயல்; ஆச்சரியத்தில் ஆஸ்திரேலியா

    முன்னாள் காதலனை பழிவாங்க காதலி செய்த செயல்; ஆச்சரியத்தில் ஆஸ்திரேலியா

    ‘காலம் எல்லாத்தையும் மாத்திடும்’ , ‘இந்த வலி எனக்கு பிடிச்சிருக்கு’, ‘ஒரு செடில ஒரு பூ’   இப்படியாக எத்தனை திரைப்படங்கள் வசனம் பேசினாலும் காதல் முறிவு ஏற்படும்போது, அச்சமயத்தில் காதலின் ரணங்கள் கொடுரமானவைதான். குறிப்பாக, ஏமாற்றக் காரணிகளால் ஒரு காதல் முறிவு ஏற்படும்போது அவற்றில் வலியும், வெறுப்பும் சற்றே அதிகமாய் இருக்கும். 

    இந்நிலையில், இப்படி காதலின் வலியும், வெறுமையும் அதிகரித்த ஒரு பெண் தன்னின் முன்னாள் காதலுனுக்காக செய்துள்ள ஒரு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆம், ஆஸ்திரேலிய செய்தித்தாளான மேக்கே & விட்சண்டே லைஃப் (Mackay and Whitsunday) என்ற நாளிதழில் நான்காவது பக்கத்தில் ஒரு செய்தி இடம்பெற்றுள்ளது. இச்செய்தியைக் கண்ட மக்கள் ஆச்சரியத்துக்கும், கேள்விக்கும் உள்ளானர்.

    அந்தப் பக்கத்தில், ‘அன்புள்ள ஸ்டீவ், நீ அவளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்று நம்புகிறேன். நீ ஒரு ஏமாற்றுக்காரன் என்பதை இப்போது இந்த முழு நகரமும் தெரிந்துகொள்ளட்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆம், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜென்னி என்ற பெண் தன்னை ஏமாற்றிய காதலனைப் பழிவாங்கும் நோக்கில் செய்தித்தாளில் இப்படியாக விளம்பரம் ஒன்றைக் கொடுத்துள்ளார். 

    மேலும், வியத்தகு விஷயமாக இந்த விளம்பரத்திற்கான பணத்தை, காதலனின் க்ரெடிட் கார்டில் இருந்தே பயன்படுத்திக்கொண்டதாகவும் அவர் அந்த விளம்பரத்தில் தெரிவித்துள்ளார். இப்போது, ஸ்டீவ் & ஜென்னி யார் என்ற கேள்வி அங்குள்ள மக்களிடையே ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விளம்பரம் குறித்துப் பல்வேறு, குறுஞ்செய்திகளை செய்தித்தாள் நிறுவனமான மேக்கே & விட்சண்டே லைஃப்பிற்கு அனுப்பியுள்ளனர்.

    இது தொடர்பாக அந்த செய்தித்தாள் நிறுவனம் கூறுகையில், ஸ்டீவ் யார் என்று எங்களுக்குத் தெரியாது என்றும், ஜென்னியைப் பற்றிய எந்த விவரங்களையும் நாங்கள் வெளியிடமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது இந்தச் செய்தி புகைப்படத்துடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இறுதியாக இந்தியாவில் உள்ள 10 நகரங்களுக்கு ‘ஸ்ட்ரீட் வியூ’ வசதி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....