Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு1,400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் வழங்கி இளம் பெண் சாதனை! மெய் சிலிர்க்க வைத்த தாயின்...

    1,400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் வழங்கி இளம் பெண் சாதனை! மெய் சிலிர்க்க வைத்த தாயின் அன்பு!

    கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 7 மாதங்களில் மட்டும் 1,400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து சாதனை படைத்துள்ளார். 

    கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிந்து மோனிகா. இவருக்கு வயது 29. இவர் பொறியியல் பட்டதாரி. இந்நிலையில் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தாய்ப்பால் தானம் செய்துள்ளார்.

    இந்த 7 மாத இடைப்பட்ட காலத்தில் மட்டும் இவர் தமிழக அரசின் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தைகளுக்கு  மோனிகா அளித்த தாய்ப்பால் அளவு 42,000 மில்லி லிட்டர் ஆகும். இதனால் இவர், ஆசிய மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர், சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில், தாய்ப்பால் தானம் வழங்குவதில் எனக்கு முதுகெலும்பாக இருந்தது அவர் கணவர் தான் என்றும், அவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

    சிந்து மோனிகாவுக்கு 19 மாத குழந்தை ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.  இவரைப்போன்ற சில பெண்கள் தாய்ப்பால் தானம் செய்து வருகின்றனர்.

    தமிழகத்தில் பொறுத்தவரையில், சுமார் 45 தாய்ப்பால் வங்கிகள் இருக்கின்றன. இதில், 35 தமிழக அரசின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கின்றன. நாட்டில் மொத்தமாகவே 70 தாய்ப்பால் வங்கிகள் மட்டுமே இருக்கின்றன. அந்த வகையில் பார்க்கும்பொழுது தமிழகத்தில் தான் அதிக தாய்ப்பால் வங்கிகள் இருக்கின்றன. இந்த வங்கிகள் மூலம் பல பச்சிளம் குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்படுகிறன. 

    இதையும் படிங்க: நெருக்கடியான சூழலில் ‘தல’ தோனி எனக்கு அனுப்பிய மெசேஜ்? மனம் திறந்த விராட் கோலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....