Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு, கோவிலுக்குள் அனுமதி மறுப்பு, இரட்டைக்குவளை முறை - அடுத்தடுத்த அதிர்ச்சி

    குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு, கோவிலுக்குள் அனுமதி மறுப்பு, இரட்டைக்குவளை முறை – அடுத்தடுத்த அதிர்ச்சி

    குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 

    வேங்கைவயல் – இந்த கிராமம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்தது. 30-க்கும் அதிகமான தலித் குடியிருப்புகள் உள்ள கிராமம் இது. 

    இந்த கிராமத்தில் கடந்த சில நாள்களாக சிறார்கள் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சிறார்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். காய்ச்சல் குறித்த காரணம் என்னவென்று கேட்கையில்,  சிறார்கள் குடித்த தண்ணீரில் ஏதேனும் கலப்பு இருந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனால், சந்தேகமடைந்த மக்கள், இன்று தங்கள் குடியிருப்புக்குள் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் ஏறிநின்று பார்த்துள்ளனர். அதில், மனிதக் கழிவு மிதப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தத் தகவல் அக்கம்பக்கம் பரவியது. 

    இதைத்தொடர்ந்து, கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், ஊராட்சித் தலைவர் எம். பத்மா மற்றும் வெள்ளனூர் காவல்துறையினரும் அங்கு வந்து பார்வையிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து ஊராட்சித் தலைவர் எம். பத்மா அளித்த புகாரின்பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, தொட்டியிலிருந்த குடிநீர் முழுவதும் அகற்றப்பட்டு, தொட்டி கழுவப்பட்டு புதிதாக தண்ணீர் ஏற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் வேங்கைவயல் சுற்றியுள்ள கிராமத்து மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    மேலும், அதே வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களை அங்குள்ள கோயிலுக்கு செல்ல மற்ற சமூகத்தினர் அனுமதிப்பதில்லை என்றும், தனிக்குவளை முறை பின்பற்றப்படுபவதாகவும் புகார் எழுந்தது. 

    இதைத்தொடர்ந்து, கோயில் விவகாரத்தில் பட்டியலின மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். அதை எதிர்த்து கோயில் பூசாரியின் மனைவி சிங்கம்மாள் சாமி வந்தது போல ஆடி பட்டியலின மக்களை இழிவாக பேசினார். இதனால் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், இரட்டைக்குவளை முறையை கடைபிடித்த டீக்கடை உரிமையாளர் மூக்கையா, அவரது மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்பு,  டீக்கடை உரிமையாளர் மூக்கையா, கோயில் பூசாரி மனைவி சிங்கம்மாளை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், தற்போது புதுக்கோட்டை, மனிதக்கழிவு கலக்கப்பட்ட நீரை குடித்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. 

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....