Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ்? - வீடியோவை வெளியிட்ட படக்குழு!

    பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ்? – வீடியோவை வெளியிட்ட படக்குழு!

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் உருவாகிய திரைப்படம்தான், பொன்னியின் செல்வன். 

    கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. 

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளிவந்த பற்பல சாதனைகளை நிகழ்த்தியது. 450 கோடி என்ற மாபெரும் வசூல் சாதனையை புரிந்துள்ளது. தற்போதும், திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

    இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்விகள் எழ, தற்போது அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளது. 

    அதன்படி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது வருகிற ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

     மேலும், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள படப்பிடிப்பு வருகிற 2023 ஜனவரி 5-10 ஆம் தேதி வரை நடைபற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    எப்போது தொடங்கும் ‘தளபதி 67’ படப்பிடிப்பு? – வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....