Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஓடிடியில் பெரும் தொகைக்கு விற்கப்பட்ட ஷாருக்கானின் பதான் - ஆச்சரியத்தில் திரையுலகு!

    ஓடிடியில் பெரும் தொகைக்கு விற்கப்பட்ட ஷாருக்கானின் பதான் – ஆச்சரியத்தில் திரையுலகு!

    ஷாருக்கானின் பதான் திரைப்படத்தின் ஓடிடி உரிமமானது 100 கோடிக்கு விலைபோயுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    ஷாருக்கானின் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகிவிட்டது. பிரம்மாஸ்திரா இந்த ஆண்டு வெளிவந்தாலும், அப்படத்தில் ஷாருக்கான் கௌரவ கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். 

    இந்நிலையில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக்கான் உடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடிக்க பதான் என்ற திரைப்படமானது உருவாகியுள்ளது. இத்திரைப்படமானது வரும் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர்.

    படம் வெளியாவதை முன்னிட்டு சமீபத்தில் பதான் திரைப்படத்திலிருந்து வெளிவந்த ‘பேஷாரம் ராங்’ பாடல் இணையத்தில் பெரும் ஹிட் அடித்தது. இதோடு, அப்பாடலில் தீபிகா படுகோனே காவி உடையில் அதீத கிளாமரில் ஷாருக்கானுடன் நடனமாடியிருப்பது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, பதான் திரைப்படத்தை புறக்கணிப்போம் என்ற வாதமும் ட்விட்டரில் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், பதான் திரைப்படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, அமேசான் பிரைம் ஓடிடி தளமானது 100 கோடிக்கு பதான் திரைப்படத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    முன்னதாக, பதான் திரைப்படத்திற்காக ஷாருக்கான் ரூ.100 கோடியும், ஜான் ஆபிரகாம் ரூ.40 கோடியும், தீபிகா படுகோனே ரூ.20 கோடியும் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மகேந்திர சிங் தோனி மகளுக்கு கால்பந்து வீரர் மெஸ்ஸி அளித்த பரிசு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....