Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகோயிலில் 'மொபைல் இல்லா விரதம்' அட இது என்ன புது விரதமா இருக்கு ?

    கோயிலில் ‘மொபைல் இல்லா விரதம்’ அட இது என்ன புது விரதமா இருக்கு ?

    “பரியுசன் பர்வா”  என்பது ஜெயின் சமூகத்தினர் விமர்சையாக கொண்டாடும் ஒரு பண்டிகையாகும். இந்த பண்டிகையையொட்டி, மொபைல் போன் இல்லா ஒரு நாள் உண்ணாவிரதத்தை அவர்கள் நேற்று கடைபிடித்தனர்.

    ஆம், மத்திய பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டம் பேகம்கஞ்ச் நகரில் ஒன்றுகூடிய ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 100 பேர் தங்களது மொபைல் போனை ஆப் செய்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு அதன்பின்னரே, தங்களது 24 மணி நேர உண்ணாவிரதத்தை தொடங்கினர். 

    இதுகுறித்து ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் அக்சய் ஜெயின் கூறியதாவது:

    டிஜிட்டல் சேவையிலிருந்து விலகி ஒரு நாள் நிம்மதியான உண்ணாவிரத்தை கடைபிடிக்க முடிவு செய்தோம். மொபைல் போன் மற்றும் இணையம் ஆகியவற்றை ஒரு நாள் முழுக்க பயன்படுத்தாமல் இயற்கையாக வாழ்வதுதான் இந்த உண்ணாவிரதத்தின் நோக்கம். மொபைல் போன், இணையத்துக்கு அடிமையாகும் பழக்கும் அதிகரித்து வருகிறது. அது குறித்த சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த புதிய முறை உண்ணாவிரதத்தை கடைபிடிக்க முடிவு செய்தோம்.

    இவ்வாறாக அவர் தெரிவித்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....