Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம்-உயர்நீதிமன்றம் அதிரடி

    நடிகர் விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம்-உயர்நீதிமன்றம் அதிரடி

    சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த்திரையுலகில் மிக முக்கிய நடிகர் விஷால். இவர் விஷால் பிலிம் பேக்டரி என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்பட தயாரிப்புக்காக, பிரபல பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருந்தார்.

    இந்த கடன் தொகையை அவருக்காக லைக்கா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

    இதைத் தொடர்ந்து, நடிகர் விஷாலும் லைக்கா நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கடன் தொகை முழுவதையும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் திரைப்பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து திரைப்படங்களின் உரிமைகளும் லைக்கா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, விஷால் தங்களுக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், ‘வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிட உள்ளதாகவும், சாட்டிலைட் மற்றும் ஓ.டி.டி.

    உரிமையை விற்க உள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இது தொடர்பான முந்தைய வழக்கு விசாரணையில், இந்த வழக்கு தொடர்பாக பணம் ஏன் கொடுக்கவில்லை என நடிகர் விஷாலின் விளக்கத்தையும் அவரது சொத்து விவரங்களையும் கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

    அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அப்போதும் நடிகர் விஷால் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து, அந்த வழக்கு இன்று (செப்டம்பர் 9) விசாரணைக்கு வந்தது. ஆனால், விஷால் நேரில் ஆஜராகவில்லை. விஷால் தரப்பு வழக்கறிஞர், உயர்நீதிமன்றத்தில் விஷாலின் சொத்து விவரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய மேலும் இரண்டு வார காலம் அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், சொத்து விவரங்களைத் தெரிவிக்க மேலும் இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

    இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என உத்தரவிட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....