Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'தமிழை நான் கற்றுக்கொள்ள வேண்டும்' - ராகுல் காந்தி உற்சாக பேச்சு!

    ‘தமிழை நான் கற்றுக்கொள்ள வேண்டும்’ – ராகுல் காந்தி உற்சாக பேச்சு!

    தமிழ் மொழி அழகான மொழி நான் அதை கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அது கடினம் என ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையில் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி முதல் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், மூன்றாவது நாளாக நாகர்கோயில் சுற்றுவட்டாரத்தில் தனது யாத்திரையை மேற்கொண்டார். அப்போது அவருடன் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இன்றைய பாதயாத்திரையின் போது ராகுல் காந்தியுடன், விவசாய சங்கத் சங்கத் தலைவர் பாண்டியன் மற்றும் கிராமத்து சமையல் யூடியூபர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டனர்.

    இதனிடையே, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார். அப்போது செய்தியாளர்களில் ஒருவர் தமிழ் கற்றுக் கொள்வீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு ராகுல் காந்தி, ‘தமிழ் அழகான மொழி.

    நான் அதை விரைவாக கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அது கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்று தனது விருப்பத்தை பகிர்ந்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....