Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பாகிஸ்தான்-வங்கதேசம் நடுவில் ‘இந்தியா’ என பெயர் சூட்டி மகிழும் தம்பதி

    பாகிஸ்தான்-வங்கதேசம் நடுவில் ‘இந்தியா’ என பெயர் சூட்டி மகிழும் தம்பதி

    வங்க தேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்ட தம்பதியர் தங்களது குழந்தைக்கு ‘இந்தியா’ என பெயரிட்டுள்ளனர். 

    பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் ஒமர் இசா. இவரது மனைவி வங்க தேசத்தை சேர்ந்தவர். இந்நிலையில் ஓமர் இசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடுவில் அவர்களது மகன் படுத்து உறங்குவது போன்ற ஒரு புகைப்படத்தை அதில் ஒரு பெரிய குறிப்பை பகிர்ந்துள்ளார். 

    புதிய பெற்றோர்கள் அனைவருக்கும் தன்னுடைய எச்சரிக்கை என்று தொடங்கும் அந்தப் பதிவில், மாறாக தங்களை போன்ற இந்தச் செய்கையை செய்த பெற்றோர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

    மேலும் தங்களது குழந்தை இப்ராஹிம் பிறந்தவுடன் அவனை தங்களது அறையிலேயே படுக்க வைத்துக்கொண்டதாகவும் புதிதாக பெற்றோர்களான தங்களது குழந்தை மீது அதீத அக்கறை இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

    தொடர்ந்து அந்தப் பதிவில், இப்ராஹிம் சிறுவனாக வளர்ந்த பின்னும் தங்கள் அறையிலேயே படுத்து உறங்குவான் என்றும், அவனுக்கென தனி அறை இருந்தாலும் தங்களது அறையிலேயே தூங்குவதற்கு பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, தான் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர் என்றும், தனது மனைவி வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவர் என்றும் கூறியுள்ளார். 

    தங்களது நடுவில் படுத்திருக்கும் அவர்களின் மகனுக்கு இப்ராஹிமுக்கு புதிய பெயர் சூட்டி இருப்பதாகவும், பாகிஸ்தானியருக்கும் வங்கதேசத்தை சேர்ந்தவருக்கும் நடுவில் படுத்திருப்பதால் அவனை ‘இந்தியா’ என அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ‘இந்தியா’ தனது வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்றும் ஒமர் இசா கூறியுள்ளார். தற்போது இந்தப் பதிவு வைரலாக பரவி வருகிறது. 

    நடிகர் தனுஷ் வெளியிட்ட நானியின் தசரா டீசர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....