Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார நிலை சீராக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதிற்கில்லை. சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல வாய்ப்பு உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறிது கவனம் செலுத்துவது நல்லது. கணவன்-மனைவி இடையே அந்நோன்னியம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உற்சாகமாக காணப்படுவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். 

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக அமைந்துள்ளன. பொருளாதார நிலை உயர்ந்து காணப்படும். பிள்ளைகள் உங்களை பெருமையடைய வைப்பர். உறவினர்களால் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். சிலருக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அலுவலக பணிகளை சற்று கவனமுடன் செய்வது அவசியம். பதற்றத்தை தவிர்த்து நிதானமாக பேசுவது நல்லது. தொழிலில் தன லாபம் அதிகரிக்கும். 

    தனுசு: 

    தனுசு ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. சிலருக்கு ஆன்மிக பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் வராது. இருப்பினும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். 

    மகரம்: 

    மகர ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார நிலை உயர்ந்து காணப்படும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களிடம் சற்று பக்குவத்துடன் நடந்துகொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்த்துவிடலாம். நண்பர்களை சந்திப்பதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. 

    கும்பம்: 

    கும்ப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் சுமூகமான சூழ்நிலையே காணப்படும். தொழிலில் சில முன்னேற்றங்களும் அதற்கான முயற்சிகளும் எடுப்பது நல்ல பலன்களைக் கொடுக்கும். 

    மீனம்: 

    மீன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் அதிக அளவில் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல வாய்ப்புகள் உருவாகும். திருமண காரியங்கள் கைக்கூடி வரும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் நன்மைகள் அதிக அளவில் நடைபெறும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்த நல்ல நேர்மையாக காணப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....