Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஆசிரியரை மரத்தில் கட்டிப்போட்டு தாக்கிய மாணவர்கள்; வைரலாகும் காட்சிகள்

    ஆசிரியரை மரத்தில் கட்டிப்போட்டு தாக்கிய மாணவர்கள்; வைரலாகும் காட்சிகள்

    செய்முறைத் தேர்வில் மதிப்பெண்களை குறைவாக அளித்ததற்காக மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளி ஆசிரியர்களை மரத்தில் கட்டிப்போட்டு தாக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் கோபிகந்தர் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 

    இந்நிலையில், 9-ம் வகுப்பு கணக்கு பாடத்தில் செய்முறை தேர்வில் குறைவான மதிப்பெண்களை அளித்ததாக அப்பள்ளியில் உள்ள சில மாணவர்கள் தெரிவித்தனர் . இந்நிலையில், குறைவான மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் ஆத்திரமடைந்ததாக தெரிகிறது. 

    இதைத் தொடர்ந்து, தங்களது கணக்கு ஆசிரியரையும், அப்பள்ளியில் உள்ள கிளார்க்கையும் கடந்த திங்கள் (ஆகஸ்ட்-29) இழுத்து வந்து பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் கட்டிப்போட்டு தாக்கியுள்ளனர். 

    இந்த தாக்குதல் தொடர்பான காணொலி இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும், இந்த காணொலி வைரலாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. 


    இந்நிலையில், தும்கா மாவட்ட கல்வி வளர்ச்சி அதிகாரி இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட ஆசிரியரோ, கிளார்க்கோ எழுத்துப்பூர்வ புகார் எதுவும் இதுவரை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    டி.ராஜேந்தர் அவர்கள் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்துக்கு விமர்சனம் தந்தால் எப்படியிருக்கும்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....