Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்காங்கிரசில் ரீல் ,ரியல் பொம்மையானது யார்? விளக்கம் சொன்ன பா.ஜ.க

    காங்கிரசில் ரீல் ,ரியல் பொம்மையானது யார்? விளக்கம் சொன்ன பா.ஜ.க

    காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுனா கார்கே வெறும் பொம்மை தலைவராக மட்டுமே செயல்படுவார் என பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் தெரிவித்துள்ளார் .

    கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்ததால், அவர் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாரும் போட்டியிடவில்லை.

    இந்நிலையில் ,காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி-நேரு குடும்பத்தைச் சேராத கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.

    இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்ட மல்லிகார்ஜுனா கார்கேக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் வரும் அதே வேளையில் நெகடிவ் விமர்சனகினாலும் வர தவறுவதில்லை .

    இதையும் படிங்க: இஸ்லாமிய மசூதியில் ஏற்பட்ட தீ விபத்து; நொறுங்கி விழுந்த ராட்சத குவிமாடம்

    அந்த வகையில் கார்கே தலைவரானது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் 24 -ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சேராத ஒருவர் தலைவர் ஆகியிருப்பது பாராட்டுக்குரியது என்றாலும் ,கட்சியின் முழு பொறுப்பும் சோனியா கையில் இருப்பதால் ,அவர் நிழல் தலைவராகவும் , மல்லிகார்ஜுனா கார்கே பொம்மை தலைவராகவும் இருந்துதான் கட்சியை வழிநடத்துவார்கள் .

    காங்கிரசை பொறுத்தவரை தலைவர் மாறினாலும் ,கட்சியின் முழு பொறுப்பும் நேரு குடும்பத்தாரிடம் தான் இருக்கும்,அதனால் காங்கிரஸீன் எதிர்காலம் இருண்டு விட்டது.வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் படுதோல்வியை சந்திந்திப்போம் என்பது முன்கூட்டியே தெரிந்ததால்தான் ராகுலும் ,சோனியாவும் தலைவர் பொறுப்பை ஏற்க்கவில்லை .

    மல்லிகார்ஜுனா கார்கேவை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் அவர்களும் இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். கார்கே, சோனியா சொல்வதை கேட்டு நடக்கும் ,ஒரு பொம்மை தலைவராக மட்டும்தான் செயல்படுவார் என தன் கருத்தை தெரிவித்துள்ளார் .

    இதையும் படிங்க: இந்தியாவில் புது வைரஸ் பரவல்; மத்திய சுகாதரத்துறை எடுத்துள்ள முடிவென்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....