Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடி20 உலக கோப்பை; தொடங்கவுள்ள அரையிறுதிப் போட்டி... மழை வந்தால் என்ன நடக்கும்?

    டி20 உலக கோப்பை; தொடங்கவுள்ள அரையிறுதிப் போட்டி… மழை வந்தால் என்ன நடக்கும்?

    இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் இன்று தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

    ஆஸ்திரேலியாவில் 2022-ம் ஆண்டுக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அக்டோபர் 16-ஆம் தேதி ஆரம்பித்த உலகக் கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ‘சூப்பர் 12’ சுற்றுகள் அனைத்தும் முடிந்து, தற்போது அரையிறுதிக்கான போட்டிகள் நடைபெறவுள்ளது. 14 அணிகளுடன் ஆரம்பித்த உலகக்கோப்பை, 4 அணிகளுடன் தற்போது உள்ளது. 

    குரூப் ஓன்றிலிருந்து இங்கிலாந்து மற்றும் நீயூசிலாந்து அணிகளும், குரூப் இரண்டிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன.

    இந்நிலையில், இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான முதலாவது அரையிறுதிப் போட்டி சிட்னி மைதானத்தில் மதியம் 1.30 மணியளவில் தொடங்கவுள்ளது. 

    இதையும் படிங்க:‘பாகிஸ்தானை எதிர்கொள்ள எந்த அணியும் விரும்பவில்லை!’ – மேத்யூ ஹைடன் சூசக எச்சரிக்கை

    இதைத்தொடர்ந்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதிப்போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நவம்பர் 13-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது. 

    எந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்திய அணியை பொறுத்தவரையில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    ‘சூப்பர்-12’ சுற்றில் மழைக்காரணமாக 4 ஆட்டங்கள் தடைபட்டு போக அரையிறுதி போட்டிகளில், இறுதிப்போட்டியில் மழை வந்தால் என்னவாகும்? என்ற கேள்விஅ பலரிடத்திலும் இருந்து வருகிறது. 

    அரையிறுதி போட்டிகளில் மழை வந்தால் போட்டி அடுத்த நாள் ஒத்திவைக்கப்படும். அந்த நாளும் மழை வந்தால் குரூப்களில் முதலிடத்தில் இருந்த அணிகள் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும். இறுதிப்போட்டியில் மழை வந்தால் அதற்கும் கூடுதல் நாள் ஒதுக்கப்படும், கூடுதல் நாளிலும் ஆட்டம் நடைபெறவில்லை என்றால் உலகக் கோப்பை வென்ற பட்டம் இரு நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....