Friday, March 15, 2024
மேலும்
    Homeவாழ்வியல்சரியான நேரத்திற்கு தூங்காதவங்களா நீங்க..? கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க..!

    சரியான நேரத்திற்கு தூங்காதவங்களா நீங்க..? கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க..!

    உலகமே கணினிமயமாக்கப்பட்ட இந்த காலகட்டத்தில் மனிதர்கள் ஏன் வாழ்கிறோம் என்பதை மறந்து வாழ்க்கையின் ஓட்டத்தில் ஓடி கொண்டிருக்கிறார்கள். இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், உடலை இயந்திரத்திற்கு ஒப்ப கடினப்படுத்தி வாழ தொடங்கிவிட்டனர். இப்படி இருக்கும் நிலையில் உடலை குறித்த அக்கறை குறைந்து, எதற்கு எடுத்தாலும் மருந்து மாத்திரை என்ற நிலையே வந்துவிட்டது.

    பொதுவாக மனிதர்களாகிய நாம் அனைவருக்குமே ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் என்பது அவசியமான ஒன்று. சரியான தூக்கம் இல்லையென்றால் மறுநாள் நம்மால் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாது. தூக்கத்தை நாம் புறக்கணிக்க புறக்கணிக்க, அது எண்ணற்ற விளைவுகளை நம் உடலில் ஏற்படுத்தும். தூக்கம் இல்லமால் மனிதன் மனிதனாகவே இருக்கமாட்டான் என பல ஆய்வுகளில் ஆராச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

    ஒரு மனிதனுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்றும் சரியான தூக்கம் இல்லையென்றால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க !

    தூக்கமின்மைப் பிரச்னை - சித்த மருத்துவர் சொல்லும் தீர்வு என்ன? | Sleeping issues - What is the solution in siddha? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online ...

    தூக்கப்பிரச்சனை என்பது தற்போது உள்ள இளைஞர் சமூதாயத்தை வாட்டி வதைக்கும் ஒன்றாக மாறிவிட்டது. தூக்கத்தை சரியான மருத்துவ அறிவு இல்லாததே இதற்க்கு காரணம். ஒரு மனிதனுக்கு உணவு என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு சரியான தூக்கம் என்பதும் முக்கியம். சரியான தூக்கம் இல்லாமல் உயிரிழந்தவர்களின் பட்டியலும் இதே சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது. தூக்கமின்மை பாதிப்புகளை வரிசை படுத்தினால் முதலில் வருவது

    இதையும் படிங்க: ‘ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை’ கோவை கார் வெடி விபத்து விசாரணையில்.. போலீஸ் பகீர் தகவல்

    1)நோய்த் தொற்று :
    தூக்கமின்மை என்பது உங்கள் உடலில் சோர்வை அதிகப்படுத்தும். அத்துடன் உடலில் உள்ள ஆன்ட்டிபயோட்டிக்ஸையும் குறைத்திடும். இதனால் உங்கள் உடல் நோய்களை எதிர்த்து போராடும் திறனை இழந்து, எளிதில் எந்தவித நோய்களும் உங்களை தொற்றுக்குள்ளாக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

    2)மறதி :
    இரவு நேர ஆழ்ந்த தூக்கத்தை தவிர்ப்பவர்களுக்கு சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் தன்மை பாதிக்கப்படும். ஞாபக சக்தி, முடிவெடுப்பது, சிக்கலான பிரச்சனைகளை தீர்ப்பது போன்றவை எல்லாம் தடைபடும். பலமான மனநிலை இல்லாமல் தடுமாற்றத்தோடே இருக்க கூடும் என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

    3)மன அழுத்தம்:
    நம் உடலில் அதிகம் வேலை செய்யும் உறுப்பாக மூளை உள்ளது. காலை முதல் இரவு வரை செயல்பாட்டிலே இருக்கும் மூளைக்கு தூக்கத்தில் மட்டுமே ஒய்வு கிடைக்கும். அந்த தூக்கம் சரியான அளவு இல்லையென்றால் மனஅழுத்தம், மூளை பாத்திப்பு போன்ற பல பிரச்சனைகள் வரக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    தூக்கமின்மை மூளையின் செயல்பாட்டை குறைக்கும். மூளை தனது வேலையை சரியாக செய்ய இயலாத நேரத்தில் மனஅழுத்தம் அதிகரிக்கும்.

    உறக்கம் ஏன் முக்கியமானது? - Quora4)நினைவுத்திறன் :
    தூக்கமின்மையால் மறதி மட்டுமல்ல உங்களது நினைவுத் திறனும் குறைகிறது.புதிதாக ஒன்றை கற்றுக் கொள்வதும், அதனை நினைவில் வைத்துக் கொள்ளவும் தூக்கம் மிகவும் அவசியம். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு முன்னால் தேவையான அளவு இடைவெளியும் ஓய்வும் தேவை.

    இரவு நேரத்தில் தூங்காமல், அல்லது குறைந்த நேரம் தூங்கினால் கூர்ந்து கவனிக்கும் திறன் குறையும். மூளை தனக்கு தேவையான ஓய்வை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்ளும் போது நமக்கு மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.

    தூக்கமின்மை மனிதனின் நினைவுத்திறனை பெரிதளவு பாதிக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    how ayurveda could help for better sleep, தூக்கம் வராம தவிக்கிறீங்களா? ஆயுர்வேத மருத்துவர் சொல்லும் அற்புதமான குறிப்புகள்! - ayurvedic treatments and herbs for insomnia in tamil ...

    5) புற்றுநோய் :
    குறைவான தூக்கம் என்பது மார்பக புற்று நோய், மலக்குடல் புற்றுநோய் மற்றும் prostate புற்றுநோய் போன்றவை ஏற்படுத்தும் சதவீதங்களை அதிகரிக்கும். பொதுவாக பகல் நேரத்தில் பணிபுரிபவர்களை விட இரவு நேரம் பணியாற்றுபவர்களுக்கு தான் இதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என ஆய்வுகள் கூறுகிறது.

    6) சருமம் :
    தூக்கமின்மை உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல சருமத்தையும் பாதிக்கிறது. சரியான அளவு நீங்கள் தூங்கவில்லை என்றால் அதனால் கருவளையம், சரும வறட்சி, அரிப்பு போன்றவை ஏற்படும். இதனால் உங்கள் தோள்களில் சுருக்கங்கள் ஏற்படக்கூட வாய்ப்பு அதிகம்.

    7) இதயம் :
    ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குக்கிறவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் கண்டிப்பாக வரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சில நேரங்களில் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் கூட அதிகமாக இருக்கின்றன.

    8) பாலுறவு:
    தூக்கமின்மை காரணமாக ஆண்களுக்கு டெஸ்ட்ரோன் அளவு அதிகளவில் குறைகிறது.ஒரு நாளில் ஐந்து அல்லது அதற்கு குறைவான நேர தூங்குபவர்களுக்கு பாலுறவு ஹார்மோன் பத்து சதவீதம் குறைகிறது.
    இதனால் குழந்தையின்மை ஏற்பட 10-ல் இரண்டு சதவீதம் வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்... | nakkheeran

    எனவே, தற்போதைய சமுதாயத்தினர், மனிதனுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து, இரவெல்லாம் கைபேசியில் நேரத்தை செலவழிக்காமல் உடல் என்ற பொக்கிஷத்தை பாதுக்காக்க முயற்சி செய்ய வேண்டும் !

    இதுபோன்ற ஆரோக்கியமான தகவல்களை அன்றாடம் தெரிந்துகொள்ள தினவாசல் செய்திகளோடு இணைந்திருங்க !

    இதையும் படிங்க: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மது விற்பனைக்குத் தடை – காரணம் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....