Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமதிய சத்துணவில் பாம்பு; பாதிக்கப்பட்ட மாணவர்கள், கடுப்பான கிராமத்தினர்

    மதிய சத்துணவில் பாம்பு; பாதிக்கப்பட்ட மாணவர்கள், கடுப்பான கிராமத்தினர்

    மேற்கு வங்க மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் மதிய சத்துணவில் பாம்பு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிர்பம் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் நேற்று மாணவர்கள் எப்போதும் போல் மதிய சத்துணவை சாப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மாணவர்கள் சிலர் உடல்நலக் குறைபாட்டுக்கு உள்ளாகினர். 

    இதனிடையே, சத்துணவு தயார் செய்யப்பட்ட பாத்திரங்களை கழுவும் தருவாயில், உணவில் பாம்பு இருந்ததை ஊழியர்கள் கண்டுள்ளனர். இதை ஆசிரியர்களுக்கு ஊழியர்கள் தெரியப்படுத்த மாணவ, மாணவிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    இந்தச் சம்பவம் குறித்து அறிந்த ஊர் பொதுமக்கள், பள்ளி முன் திரண்டு பள்ளியின் தலைமை ஆசிரியரின் காரை அடித்து சேதப்படுத்தினர். இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததும் விரைந்து வந்து கிராம மக்களிடமிருந்து தலைமை ஆசிரியயை பத்திரமாக மீட்டனர்.

    மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மதிய சத்துணவில் கோழிக்கறி சேர்க்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....