Monday, May 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇலவச திட்டம் வேறு, நலத்திட்டம் வேறு - உச்சநீதிமன்றம் கருத்து

    இலவச திட்டம் வேறு, நலத்திட்டம் வேறு – உச்சநீதிமன்றம் கருத்து

    இலவச திட்டங்களை அறிவிப்பதால், அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது ஜனநாயக விரோதமான செயல் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

    தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அஸ்வினி உபாத்யாய என்ற வழக்கறிஞர் அண்மையில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். 

    அந்த மனுவில் அவர், நடைமுறைக்கு ஒத்துவராத இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கி, அதன் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, நேற்று (ஆகஸ்ட் 11) விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், ‘இன்றைக்கு சில அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை இலவசங்களை அறிவிப்பது என்பது ஒரு கலையாகவே மாறிவிட்டது. இதை அடிப்படையாக வைத்துதான் தேர்தலை அவர்கள் சந்திக்கின்றனர். இலவச பொருள்களை விநியோகிப்பதுதான் நலத் திட்ட நடைமுறை என சில கட்சிகள் புரிந்து கொண்டிருப்பது துரதிருஷ்டவசமானது. இந்தப் புரிதல் முற்றிலும் அறிவியல்பூர்வமற்றது. இது பொருளாதாரப் பேரிடருக்கு வழிவகுக்கும்’ என குறிப்பிட்டார்.

    இந்த வாதத்தைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைக்க அறிவுறுத்தினார். 

    மேலும், இதுகுறித்து தலைமை நீதிபதி கூறியதாவது:

    தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது மிகவும் தீவிரமான பிரச்சினை. ஆனாலும், சட்டமியற்றும் அதிகாரத்தில் என்னால் தலையிட முடியாது. இலவசத்துக்கும், நலத் திட்டத்துக்கும் இடையே வேறுபாடு உள்ளது. இலவச திட்டத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பையும், நலத் திட்ட நடைமுறையையும் ஈடுசெய்ய வேண்டியது அவசியம். மேலும், அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது ஜனநாயக விரோதமான செயல் என்றார்.

    இதைத் தொடர்ந்து இந்த வழக்கை ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன் அதற்குள் மத்திய அரசு, தேர்தல் ஆணையம், மனுதாரர் என அனைத்துத் தரப்பினரும் ஆக்கபூர்வமான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தினார்.

    ‘சுகாதாரம், கல்விக்கான அரசின் செலவு இலவசங்கள் அல்ல’- நிதி அமைச்சர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....