Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமீண்டும் கேப்டனாகும் கங்குலி.. ஆவலுடன் தயாராகும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்

    மீண்டும் கேப்டனாகும் கங்குலி.. ஆவலுடன் தயாராகும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்

    லெஜண்ட்ஸ் லீக் போட்டிக்காக கங்குலி தலைமையிலான இந்திய மஹாராஜாஸ் அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் மூத்த வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் போட்டி இந்த ஆண்டு கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்துடன் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் இந்தப் போட்டி இந்தியாவின் 75-வது சுதந்திர தின நிறைவு விழாவுக்கான அர்ப்பணிப்பாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக, இந்த ஆண்டு ஜனவரியில் ஓமனில் நடைபெற்ற முதல் பருவத்தில் லயன்ஸ் – ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிச்சுற்றில் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. 2-வது பருவத்தில் 4 அணிகள் பங்கேற்கின்றன. 

    இந்திய மூத்த வீரர்களின் அணி இந்திய மஹாராஜாஸ் என்று அழைக்கப்படுகிறது. கங்குலி தலைமையிலான மஹாராஜாஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16 அன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்திய மஹாராஜாஸ் – இயன் மார்கன் தலைமையிலான வேர்ல்டு ஜெயண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன.

    அறிவிக்கப்பட்டுள்ள இந்திய மஹாராஜாஸ் அணி :

    கங்குலி (கேப்டன்), சேவாக், முகமது கைஃப், யூசுஃப் பதான், பத்ரிநாத், இர்ஃபான் பதான், பார்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), அசோக் டிண்டா, பிரக்யான் ஓஹா, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங், ஜொகிந்தர் சர்மா, ரீதிந்தர் சிங் சோதி.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....