Saturday, March 16, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்? மேஷம் முதல் கன்னி வரை

    இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்? மேஷம் முதல் கன்னி வரை

    மேஷம்: 

    மேஷ ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் ஓரளவு சுமாரான நாட்களாக காணப்படுகின்றன. தேவையற்ற சில மனக் குழப்பங்கள் தோன்றி மறைவதால் சற்று சோர்வுடன் இருப்பீர்கள். உறவினர்கள் வருகை உங்களுக்கு சற்று சாதகமாக அமையும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆன்மிக நாட்டான் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டைப் பெரும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் லாபமும் இருக்கும். 

    ரிஷபம்: 

    ரிஷப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாட்களாக இருக்கின்றன. கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் இருக்கும். உறவுகளால் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். கடன் வாங்குவதை தவிர்த்து செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அலுவலக பணிகளில் கவனமுடன் இருப்பது நல்லது. தொழிலில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஆடை, அணிகலன்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். 

    மிதுனம்: 

    மிதுன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு அமைதியான மகிழ்ச்சி பொங்கும் நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார சூழ்நிலை எப்போதும் போல் நன்றாக இருக்கும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலக சூழ்நிலை மகிழ்ச்சியானதாக அமையும். தொழிலில் சற்று மந்தமான நிலையே காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். 

    கடகம்:

    கடக ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்துச் சேரும். அலுவலகத்தில் பணி அதிகரித்தாலும் சற்று பொறுத்து நடப்பது நல்லது. தொழிலில் தற்போது புதிய முதலீடுகளை தவிர்ப்பது அவசியம். கணவன்-மனைவி இடையே அன்பு கூடும். 

    சிம்மம்: 

    சிம்ம ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு அதிக நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. எதிர்பார்த்த நல்ல செய்தி வந்துச் சேரும். பேச்சில் மட்டும் சிறிது கவனம் தேவை. பொருளாதார சூழ்நிலை திருப்திகரமானதாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு உங்களுக்கு மகிழ்ச்சி தருவதோடு அதில் ஆதாயம் இருக்கும். திருமண பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். அலுவலகத்தில் அமைதியான நிலையே தொடரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். 

    கன்னி: 

    கன்னி ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாகவே காணப்படுகின்றன. பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். சில நேரங்களில் பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆன்மிக வழிபாடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலக பணிகள் அதிகரிக்கும் இருப்பினும், அதற்கேற்ற சலுகைகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றமும் அதை விரிவுபடுத்தவும் வாய்ப்பு உண்டாகும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....