Sunday, March 17, 2024
மேலும்
    Homeஆன்மிகம்என்ன ராசிக்கு என்ன பலன்- துலாம் முதல் மீனம் வரை

    என்ன ராசிக்கு என்ன பலன்- துலாம் முதல் மீனம் வரை

    துலாம்: உங்களிடம் எதிர்காலத்தைப் பற்றிய பரந்த நோக்கு காணப்படும். உங்கள் இலக்குகளில் வெற்றி அடைய கடினமாக உழைப்பீர்கள். நீங்கள் பலனை அதிகம் எதிர்பார்க்காமல் பணியாற்றுவீர்கள். இதனால் குறித்தநேரத்தில் பணிகளை ஆற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். வங்கியிருப்பு உங்களுக்கு சாதகமான வகையில் பராமரிப்பீர்கள். உங்கள் துணையிடம் நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பீர்கள். இதனால் இருவரும் நல்ல உறவை பராமரிப்பீர்கள்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களிடம் சிறந்த ஆற்றல் காணப்படும்.

    விருச்சிகம்: உங்கள் வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சகபணி யாளர்களின் நல்லாதரவு பெருகும். பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பொருளாதார பாதுகாப்பு காணப்படும். திருப்தியான நிலை இருக்கும். உங்கள் துணையுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இதனால் இருவருக்குமிடையே உறவுப் பிணைப்பு வலுவாக இருக்கும்.உங்களிடம் காணப்படும் மனத் திருப்தி காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

    தனுசு: உங்கள் பணிகளை எளிதில் முடிப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.உங்கள் பணியில் வெற்றி பெறுவீர்கள். குறித்த நேரத்திற்கு முன்பே உங்கள் பணிகளை முடித்து விடுவீர்கள்.உங்கள் கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகை வகையில் பணம் பெறுவீர்கள்.உங்கள் அன்பான வார்த்தைகளால் உங்கள் துணையை மகிழ்விப்பீர்கள். இதனால் உங்கள் உறவில் மகிழ்ச்சி ஏற்படும்.உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    மகரம்: நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதன் மூலம் இந்தச் சூழ்நிலைகளை ஜெயிக்கலாம். பிரார்த்தனை நல்ல பலன் தரும். பணியில் தாமதங்கள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். பண இழப்பு ஏற்படலாம். உங்களின் பிரியமான ஒருவரின் உடல் நிலைக்காக பணம் செலவு செய்ய நேரும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக நட்புடன் பழக வேண்டும்.தோல் சம்பந்தமான ஒவ்வாமை காணப்படும். எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.

    கும்பம்: முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். உங்களின் தனித்தன்மைக்கான பாராட்டைப் பெறுவீர்கள்.பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். உங்கள் சேமிப்பு உயரும்.உங்களின் தகவல் பரிமாற்றம் மூலம் உங்கள் துணையுடன் நல்லுறவை பகிர்ந்து கொள்வீர்கள். நல்ல ஆரோக்கியம் காணப்படும். உங்களிடம் உறுதியும் ஆற்றலும் நிறைந்திருக்கும்.

    மீனம்: உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும் வகையில் பயனுள்ள திட்டங்களை தீட்டுங்கள். பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். பல நன்மைகளை அடைவதற்கான சாத்தியம் உள்ளது. பண வரவு சாதகமாக உள்ளது. உங்களின் சேமிக்கும் ஆற்றல் உயரும், இதனால் பொருளாதார பாதுகாப்பு காணப்படும். உங்கள் அன்பான நேர்மையான உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிபடுத்துவீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு வளரும்.உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    என்ன ராசிக்கு என்ன பலன்- மேஷம் முதல் கன்னி வரை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....