Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்என்ன ராசிக்கு என்ன பலன்- மேஷம் முதல் கன்னி வரை

    என்ன ராசிக்கு என்ன பலன்- மேஷம் முதல் கன்னி வரை

    இந்த வார ராசிபலன்கள்:

    மேஷம்: நீங்கள் எடுத்த முயற்சியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும் முன்னேற்றமும் காணப்படும். உங்கள் பணிகளை திறமையாக கையாள்வீர்கள். பணவரவு திருப்தியை அளிக்கும். உங்கள் வங்கியிருப்பு வளர்வதைக் காண்பீர்கள். உங்கள் அன்பை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். அமைதியான அணுகுமுறை காரணமாக இந்த வாரம் உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    ரிஷபம்: உங்கள் லட்சியங்களை அடைய கடுமையாகப் போராட வேண்டும். உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி அமைதியாக இருக்க வேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும். குறித்தநேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. இது உங்களுக்கு கவலையை உருவாக்கும். குடும்ப நலத்துக்காக பணம் செலவு செய்வீர்கள். அதிகரிக்கும் பொறுப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். குடும்ப பிரச்சனை ஒன்றின் காரணமாக உங்கள் துணையுடன் நல்லுறவை பராமரிக்க இயலாது. உறவினர்களின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படலாம். பணம் செலவு செய்ய நேரும்.

    மிதுனம்: மனதில் தைரியம் மற்றும் உறுதி கொண்டால் நன்மை கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.நீங்கள் புத்துணர்ச்சியோடு வேலையை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். உங்கள் திறமை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். நிதிநிலைமை சாதகமாக இருக்கும். பண வரவு காணப்படும். உங்கள் துணையுடன் மனம் திறந்து பேச வேண்டும். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் மன வலிமை காரணமாக ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

    கடகம்: உங்கள் அன்றாட செயல்களை கவனமாக செய்ய வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் மனக் கட்டுப்பாட்டை அடையலாம். அதிகரிக்கும் பணிகள் காரணமாக உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. பண வரவு காணப்படும். சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வீர்கள். இதனால் அவரின் பாராட்டைப் பெறுவீர்கள். கடவுள் அருளால் ஆரோக்கியமாய் இருப்பீர்கள்.

    சிம்மம்: மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் இருப்பது நல்லது. தெளிந்த மனதுடன் இருந்தால் உங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்கலாம். பணிகள் இறுக்கமாக காணப்படும். பணியின் போது தவறுகள் நேர வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவினங்கள் காணப்படும். சிறிது பணம் இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் மனதில் உள்ள கசப்பான உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் குழப்பம் ஏற்படும். முதுகுவலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. பிரார்த்தனை அல்லது தியானம் மேற்கொள்வது நல்லது.

    கன்னி: உங்கள் செயல்கள் சுமுகமாக நடக்க அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். சில சமயங்களில் நம்பிக்கை இழப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி காணலாம். அதிக பணிகளை சந்திக்க நேரும். உங்கள் சக பணியாளர்களுடன் சகஜமாகப் பழகவும். நிதிநிலைமை சீராக இருக்காது. இன்றைய செலவினங்களை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். உங்கள் துணையிடம் புரிந்துகொண்ட மனநிலையோடு பழக வேண்டும்.

    என்ன ராசிக்கு என்ன பலன்- துலாம் முதல் மீனம் வரை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....