Monday, March 18, 2024
மேலும்
  Homeஜோதிடம்காதலைச் சொல்ல.....இந்த வார ராசிபலன்கள்; துலாம் முதல் மீனம் வரை இதோ!

  காதலைச் சொல்ல…..இந்த வார ராசிபலன்கள்; துலாம் முதல் மீனம் வரை இதோ!

  துலாம்:

  உங்களுக்கான வளர்ச்சியில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். மற்றவர்களின் ஆதரவை நாடுவதை விட உங்கள் செயல்திறன் மற்றும் திறமையை நம்பி செயல்பட வேண்டும். மேலதிகாரிகளுடன் சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் சச்சரவுகளை தவிர்க்கலாம்.

  நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். உங்கள் அன்பை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் பிரியமானவருடன் நல்லுறவை அமைத்துக் கொள்வீர்கள். இந்த வாரம் சிறந்த ஆரோக்கியம் காணப்படும். உங்களிடம் காணப்படும் மன தைரியம் உங்களை சிறப்பாக வைத்திருக்க உதவும்.

  விருச்சிகம்:

  வாரத்துவக்கம் உங்களுக்கு சாதகமாக அமையும். முக்கியமான முடிவுகளை எடுக்க இன்றைய தினத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஒப்புக்கொண்ட பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற பதட்டம் காணப்படும். சகபணியாளர்களிடம் நல்லுறவைப் பேணுவது பயனளிக்கும்.

  பொறுப்புகளும் பணத் தேவைகளும் அதிகமாகக் காணப்படும். அது உங்களை வருத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் கலகலப்பாக இருக்க வேண்டும். அதன் மூலம் மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைக்கும். பதட்டம் காரணமாக நரம்பு தளர்ச்சிக்கு ஆளாகலாம். பிரார்த்தனை மூலம் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

  தனுசு:

  உறவுகளில் சிக்கல் வராமல் இருப்பதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். புதிய உறவுகள் ஏற்பட சாத்தியம் உள்ளது. மிகுந்த பொறுமை அவசியம். சிறந்த நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பணியை எளிதாக முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவு காணப்படும்.

  நீங்கள் உங்கள் குழந்தைகளின் வளர்ச்சியைக் காண்பீர்கள். பூர்வீகச் சொத்து, காப்பீடு அல்லது லாட்டரி மூலம் பணம் கிடைக்கலாம். உங்கள் துணையுடனான உறவில் சமநிலையோடு இருங்கள். இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். தோல் சம்பந்தமான பிரச்சனைகள் காணப்படலாம். எண்ணெய் பதார்த்தங்கள் உட்கொள்வதை தவிர்க்கவும்.

  மகரம்:

  வெளியிடங்களுக்குச் செல்வது சிறப்பான உணர்வைத் தரும். உங்கள் செயல்களில் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பதைவிட யதார்த்தமாக இருப்பது அவசியம். முடிந்தவரை அமைதியாக இருக்க பழகுங்கள்.மனஅழுத்தம் காரணமாக கவனக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

  நிதி விஷயங்களில் வளர்ச்சி காணப்படும். பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் பெறுவீர்கள். நீங்கள் உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பேசுவீர்கள். அதனால் நல்ல புரிந்துணர்வு காணப்படும். இருமல் அல்லது சளி ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆரோக்கியம் சுமாராக காணப்படும். குளிரூட்டப்பட்ட உணவு வகைகளை தவிர்த்தல் நலம்.

  கும்பம்:

  ஓரு துடிப்பான நாள் உங்கள் முன் இருக்கிறது. வாரத்தின் துவக்கத்தை புத்துணர்ச்சியோடு ஆரம்பியுங்கள். உங்கள் சுய வளர்ச்சிக்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும். சேவை சார்ந்த ஈடுபாடு காரணமாக பணி மற்றும் பணியிடச் சூழுல் உங்களுக்கு சாதகமாக காணப்படும்.

  பணியில் தவறுகள் நேராவண்ணம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்ப உறுப்பினர்களின் உடல் நலத்திற்காக பணத்தை செலவு செய்ய நேரலாம். உங்கள் துணையிடம் நேரம் ஒதுக்கி அவர் /அவள் விரும்பும்படி இருங்கள். இதனால் உறவில் நல்லிணக்கம் காணப்படும். இன்று ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். உங்களிடம் இன்று வலிமை நிறைந்து காணப்படும்.

  மீனம்:

  சில தடங்கல்களுக்குப் பின் உங்களுக்கு திருப்தி கிடைக்கும். உங்கள் கவலைகளை மறக்க மனதை அமைதியாக வைத்திருங்கள்.பணி நிமித்தமான பயணங்கள் காணப்படும். பணியில் மும்மரமாக செயல்படுவீர்கள். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனை சுமையாக உணர்வீர்கள்.

  பணத்தை திட்டமிட்டு தேவைகளுக்கேற்ப ஒதுக்கி செலவுகளை தவிர்த்திடுங்கள். இந்த வாரம் காதலுக்கு பொருத்தமான வாரமாக உணர்வீர்கள். உங்கள் காதலை உங்கள் தந்தையிடம் கூட கூறுவீர்கள். அது உங்களுக்கு சாதககமாக இருக்கும். இன்று சிறந்த ஆரோக்கியத்தின் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

  உங்கள் துணையிடத்தில்…..இந்த வார ராசிபலன்கள்; மேஷம் முதல் கன்னி வரையில் இதோ!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....