Monday, March 18, 2024
மேலும்
  Homeவாழ்வியல்மொட்டை மாடித் தோட்டம் அமைக்க ஆசையா? அப்போ, இதைப் படிங்க...

  மொட்டை மாடித் தோட்டம் அமைக்க ஆசையா? அப்போ, இதைப் படிங்க…

  உங்கள் வீட்டில் ஒரு மொட்டை மாடி இருந்தால், அங்கேயே ஒரு காய்கறித்  அமைத்து நமக்குத் தேவையான உணவை நாமே தயாரிக்கமுடியும்.

  சரி ஏன் மாடித் தோட்டம் அமைக்க வேண்டும்? இத்தொகுப்பில் காண்போம் வாருங்கள் :

  மாடித் தோட்டம் அமைப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், மண் நிரப்புவதற்கான தொட்டிகளையோ அல்லது சாக்குப் பைகளையோ அல்லது ப்ளாஸ்டிக் பைகளையோ எடுத்துக்கொள்ளுங்கள். கீரை வகைகளை விளைவிக்க 1/2 அடி ஆழத்திற்கு மேல் மண் இருந்தால் போதுமானது. செடி வகைகளுக்கு 1 அடி ஆழத்திற்கு மேல் மண் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். கொடி வகைகளுக்கு 3 அடிக்கு மேலாக இருக்கும்படி பைகளில் மண்ணை எடுத்துக்கொள்ளவும். மண் போடும்போது அதோடு சம அளவு இயற்கையாக மட்கும் குப்பைகள் எதுவாயினும் சேர்க்க வேண்டும்.

  குப்பைகளையும் மண்ணையும் நன்கு கலந்து பைகளில் இடவேண்டும். குப்பைகளுக்காக நீங்கள் எங்கும் தேடிப்போக வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டு அன்றாட குப்பைகளிலேயே மட்கும் குப்பைகளான காய்கறி கழிவுகள் மற்றும் வீட்டின் முன் உதிர்ந்துள்ள மர இலைகள் என எதுவாயினும் உபயோகித்துக்கொள்ளலாம். முதலில் நீங்கள் மண்ணை இடும்போது சிறிது நாட்டுப் பசுவின் சாணம் கிடைத்தால் சேர்த்துக்கொள்ளலாம். அது நல்ல உரமாக இருக்கும்.

  பின் உங்களுக்குத் தேவையான காய்கறி விதைகளை சேகரித்தோ அல்லது கடைகளில் வாங்கியோ பைகளில் ஊன்றி வைத்தால் போதும்! இயற்கை தன் விளையாட்டை ஆரம்பித்துவிடும்! அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் உங்கள் வீடுகளில், உங்கள் மாடித் தோட்டத்தில் இயற்கை முறையில் விளைந்த கீரை குழம்பாகவும், வெண்டைக்காய்கள் கூட்டாகவும், தக்காளிகள் பச்சடியாகவும் மணமணக்கும்.

  ஒரே குடும்ப பயிர்கள்..

  மாடித்தோட்டத்துல விவசாயம் செய்றவங்க, ஆர்வக்கோளாறுல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களைப் பக்கத்துல பக்கத்துல நடவு செஞ்சிடுறாங்க. அப்படி செய்யக் கூடாது. இது மிகப்பெரிய தவறாகும்.

  நமக்கு இருக்கிறதே கம்மியான இடம். இதுல எப்படித் தள்ளித் தள்ளி வைக்கிறதுனு யோசிக்கிறீர்களா? தக்காளியை அடுத்து வெண்டைக்காய் வைக்கலாம். இது வேற குடும்பத்தைச் சேர்ந்தது. தக்காளிக்கு வர்ற பூச்சி இதுக்குப் போகாது. தக்காளி செடியில இருந்து 4 அடி தள்ளிக் கத்திரிக்காய் செடி வையுங்க. அதுல இருந்து 4 அடி தள்ளி மிளகாய் செடியை வையுங்க. இவைகளுக்கு இடையில இருக்குற இடைவெளியில மத்த பயிர்களை வையுங்க.

  சிலர் கேரட், முட்டைகோஸ் மாதிரியான இங்கிலீஸ் காய்கறிகளை மாடித்தோட்டத்துல பயிர் பண்றாங்க. அதுக்கு ஷேட்நெட் பயன்படுத்துறாங்க. அது வெயிலைக் குறைக்குமே தவிரக் குளிர்ச்சியை ஏற்படுத்தாது. இந்தப் பயிர்கள் எல்லாம் குளிரான பகுதிகள்ல வளரக்கூடிய பயிர்கள். ஆனா, பல வீடுகள்ல இந்தப் பயிர்களை வளர்க்குறாங்க. மண்ணுக்குள்ள வளரும் பயிர், நேரடியா சூரிய ஒளி படாத இடத்துல வச்சா வளரும். ஆனால், அது சரியான முறை இல்லைனு தோட்டக்கலைத்துறை விஞ்ஞானிகள் சொல்றாங்க.

  மாடித்தோட்ட விவசாயத்துல இன்னோர் அடிப்படை, இயற்கை விவசாயம். நம்ம வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை, விஷம் இல்லாம உற்பத்தி பண்ணிச் சாப்பிடணும்னுதான் மாடித்தோட்டம் போடுறோம். இதுல அவசரத்துல சிலர் ஒரு தப்பு பண்ணிடுறாங்க. சில நேரங்கள்ல பூச்சித் தாக்குதல் அதிகமாகிடும். உதாரணமாக, மேலே சொன்ன மாதிரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களைப் பக்கத்துல பக்கத்துல வைக்கிறதுனாலக்கூட வரலாம். அதுமாதிரி அதிக பூச்சிக வந்தவுடனே பதறிப்போய், அவசரத்துக்கு ரசாயன மருந்தை வாங்கிட்டு வந்துத் தெளிச்சிடுறாங்க. அது மிக மோசமான விளைவுகளைக் கொடுக்கும்.

  முக்கியமானவைகள்…

  இன்னொரு முக்கியமான விஷயம் மாடித்தோட்டத்தில மண் அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. அதுக்குப் பதிலா தென்னை நார்க்கழிவுதான் பயன்படுத்தணும். மண் அதிகமா பயன்படுத்தும்போது மாடியில எடை கூடிக்கிட்டேப் போகும். அது ஒரு கட்டத்துல கட்டடத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். பலரும் மாடியில மண் தொட்டி பயன்படுத்துறாங்க. அதுவே எடை அதிகம்.

  அதுல மண்ணை வேற கொட்டிடுறாங்க. வீட்ல கீழ்ப்பகுதியில நிலத்தில் மண் தொட்டி பயன்படுத்தலாம். ஆனா, மாடியில் பயன்படுத்தும்போது மண் தொட்டி, மண் இரண்டையும் தவிர்ப்பது நல்லது. அதேபோல மாடித்தோட்டத்துல தண்ணி தேங்காம வடிஞ்சி போற மாதிரி பார்த்துக்கணும். இப்ப அதுக்கு தனியா சிமென்ட், பெயின்ட்னு பல டெக்னாலஜி கடைகள்ல கிடைக்குது.

  சோயா பிரியாணி இப்படி செய்தால் சுவை அள்ளும்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....