Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதாத்தாவின் ஆசையை நிறைவேற்ற வித்தியாசமான முறையில் திருமண ஊர்வலத்தை நடத்திய பேரன்மார்கள்

    தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற வித்தியாசமான முறையில் திருமண ஊர்வலத்தை நடத்திய பேரன்மார்கள்

    மத்திய பிரதேசத்தில் தங்களது தாத்தாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது பேரன்கள் ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலம் நடத்தி அசத்தியுள்ளனர். 

    திருமண நிகழ்ச்சிகளில் பொதுவாக மாப்பிள்ளை-மணப்பெண் ஊர்வலம் முக்கிய பங்கு வகிக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் ஊர்வலமாக வந்த பிறகே திருமணம் நடக்கும் இடத்திற்கு செல்வர்.

    உள்ளூர் முதல் பெரிய ஊர் வரை இந்த மாப்பிள்ளை-மணப்பெண்  ஊர்வலம் நடத்தப்படுகிறது. சிலர் குடைபிடித்து நடந்து செல்வர். சிலர் காரில் செல்வர். இன்னும் சில திருமண நிகழ்ச்சிகளில் குதிரைகள், யானைகள் மீதும் சாரட் வண்டிகளிலும் செல்வர். 

    அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில், மிகவும் வித்தியாசமான முறையில் திருமண ஊர்வலம் நடைபெற்றுள்ளது. குரானா கிராமத்தில் வசித்து வரும் ஹேம் மண்ட்லோய் மற்றும் யாஷ் மண்ட்லோய் ஆகியோருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதில், அவர்களின் தாத்தாவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக ஹெலிகாப்டரில் தங்களது திருமண ஊர்வலத்தை நடத்தினர். இதனை அப்பகுதி மக்கள் மிகவும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். 

    ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலம் நடத்துவது பாரம்பரிய விழாவாக கலந்துவிட்டதாகவும், வருங்கால தலைமுறையினருக்கு இதேபோன்று வாடகைக்கு ஹெலிகாப்டரை அமர்த்தி ஊர்வலம் நடத்தப்போவதாகவும் மாப்பிள்ளைகள் தெரிவித்தனர்.  

    காதலர் தினம்: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரோஜாக்களுக்கு தடை விதித்த நேபாளம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....