Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமேட்டூர் அணை நிரம்பியது- 16 கண் மதகு வழியே தண்ணீர் திறப்பு

    மேட்டூர் அணை நிரம்பியது- 16 கண் மதகு வழியே தண்ணீர் திறப்பு

    இன்று காலை 10 மணி நிலவரப்படி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால், அணையின் 16 கண் மதகும் திறந்துவிடப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கடந்த 8-ம் தேதி முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. கடந்த 5 நாள்களாகவே மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. 

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.29 அடியாகவும் நீர் இருப்பு 90.92 டிஎம்சியாகவும் இருந்தது. அணைக்கான நீர்வரத்து 1.18 லட்சம் கன அடியாக இருந்தது. அதேபோல், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  

    இன்று காலை 10 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. 

    மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால், அணையின் 16 கண் மதகும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மேட்டூர் அணையின் இடது கரையான 16 கண் பாலம் பகுதியில் காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.  

    இதில், பொதுப்பணித்துறையின் மேட்டூர் அணையின் நிர்வாகப் பொறியாளர் சிவகுமார், உதவி நிர்வாக பொறியாளர் செல்வராஜ், அணைப்பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    மேட்டூர் அணை: கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....