Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமேட்டூர் அணை: கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    மேட்டூர் அணை: கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    மேட்டூர் அணையில் உள்ள 16 கண் மதகு வழியே தண்ணீர் திறந்துவிடப்பட்டதுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

    இன்று காலை 10 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. 

    மேட்டூர் அணையின் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: 

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 119 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் விரைவில் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ளது. 

    மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் கால்வாயின் வழியாக 50 ஆயிரம் கன அடி முதல் 1 லட்சம் கன அடி தண்ணீர் வரை எந்த நேரத்திலும் திறந்துவிடப்படலாம். 

    உபரி நீர் கால்வாயின் வழியாக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அதனால், காவிரி கரையோரம் உள்ள மக்களும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். 

    உயிர், உடமைகள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....