Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வரலாற்றை மறைத்ததா பொன்னியின் செல்வன்?

    வரலாற்றை மறைத்ததா பொன்னியின் செல்வன்?

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாறு மறைக்கப்பட்டிருப்பதாக கூறி இயக்குநர் மணிரத்னத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

    மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் பொன்னியின் செல்வம் திரைப்படம் உருவாகியுள்ளது. 

    இரு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இரு பாகங்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இதனை அடுத்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதைமாந்தர்களை அவ்வபோது போஸ்டராக இணையதளத்தில் படக்குழு வெளியிட்டு வந்தது. 

    இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி இயக்குனர் மணிரத்னம், நடிகர் விக்ரம் உள்ளிட்டோருக்கு வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    சோழ வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லாத நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் நெற்றியில் நாமம் இட்டுள்ளது போன்ற காட்சி அமைப்பு தவறானது என சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த செல்வம் என்பவர் மணிரத்னம், நடிகர் விக்ரம் உள்ளிட்டோருக்கு வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

    மேலும், செல்வம் தான் அனுப்பிய வழக்குரைஞர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளதாவது : 

    எத்தனை வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது என்பதை படம் பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் படத்தை வெளியிடும் முன் எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும். 

    எங்களுக்கு திரையிட்டு காட்டாமல் படத்தை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொன்னியின் செல்வன் படத்தில் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதா என்பது எங்களுக்கு தெரிய வேண்டும்.

    இவ்வாறு வழக்குரைஞர் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொன்னியின் செல்வன் திரைப்படம், எழுத்தாளர் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புதினத்தை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியாவில் 3-வது நாளாக 20 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா தொற்று

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....