Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல் தொடர்; தில்லி அணிக்கு புதிய கேப்டன்..

    ஐபிஎல் தொடர்; தில்லி அணிக்கு புதிய கேப்டன்..

    ஐபிஎல் தொடரில் தில்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 16-ஆவது ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற மார்ச் 31-ஆம் தேதி தொடங்கி மே 21-ஆம் தேதி நிறைவடைகிறது.

    இந்நிலையில், ஐபிஎல் குறித்த பேச்சுகள் சமூகவலைதளம் முழுக்க நீண்டுள்ளது. பல வீரர்களும் ஐபிஎல் குறித்து தங்களது கருத்துகளை, எதிர்பார்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அணிகளும் தங்கள் அணி சார்ந்த அப்டேட்டுகளை வழங்கி வருகின்றன. 

    அந்தவகையில், தற்போது தில்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். 

    முன்னதாக, 2016-ல் ஐபிஎல் போட்டியை சன்ரைசர்ஸ் வென்றபோது அந்த அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இலங்கை தமிழர்களுக்கு வீடு – ‘இது ஒரு மைல்கல்’ என அண்ணாமலை பதில்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....