Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இலங்கை தமிழர்களுக்கு வீடு - 'இது ஒரு மைல்கல்' என அண்ணாமலை பதில்..

    இலங்கை தமிழர்களுக்கு வீடு – ‘இது ஒரு மைல்கல்’ என அண்ணாமலை பதில்..

    இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் ஒப்பந்தம் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நலத்திட்டப் பணிகளில் ஒரு மைல்கல் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    இலங்கை தமிழர்களுக்கு தலா ரூ.28 லட்சத்தில் 4 ஆயிரம் வீடுகள் கட்டித் தர அந்நாட்டு அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து பல அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார். 

    அவர் தெரிவித்துள்ளதாவது; 

    சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களின் வாழ்வாதாரம் முன்னேற, தலா ரூ.28 லட்சம் மதிப்பில் 4 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதற்கான ஒப்பந்தம் இரு நாட்டு அரசுகள் இடையே கையெழுத்தாகியுள்ளது.

    இந்தியாவின் நாகரிக இரட்டை நாடான இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நலத்திட்டப் பணிகளில் இது ஒரு மைல்கல்.  

    என்று தெரிவித்துள்ளார். 

    ஓடிடியில் பதான் எப்போது? வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....