Saturday, March 16, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்ஆம்லெட்டில் ஸ்டைலாக ''ஃபிளிக் ஷாட்'' அடித்த சச்சின் - இன்ஸ்டாவில் இப்ப இதான் ட்ரெண்டிங்

    ஆம்லெட்டில் ஸ்டைலாக ”ஃபிளிக் ஷாட்” அடித்த சச்சின் – இன்ஸ்டாவில் இப்ப இதான் ட்ரெண்டிங்

    சச்சின் டெண்டுல்கர் ஒரு உணவகத்தில் ஆம்லெட் போடும் காணொலி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உலகளவில் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் என்பது எண்ணிலடங்காதவை . இந்திய கிரிக்கெட் வீரர் என்றாலும் உலகளவில் இவருக்கென்று பெரும் ரசிக கூட்டம் எப்போதுமே உண்டு . கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும் தற்போது சாலைப் பாதுகாப்புக்கான உலக கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான அணி விளையாடி வருகிறது. 

    இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் ஒரு உணவகத்தில் ஆம்லெட் போடும் காணொலி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொலியை சச்சின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 

     

    அந்த காணொலியின்படி, உணவகம் ஒன்றில் செஃப்களுடன் இணைந்து சமைக்கும் சச்சின், ஆம்லேட்டை திருப்புவதற்கு சரியான நேரத்துக்காக காத்திருக்கிறார். பொறுமையுடன் நின்று சரியான தருணத்தில் ஆம்லேட்டை கிட்டத்தட்ட தேர்ந்த சமையல்காரர் போல் தூக்கிப்போட்டு சச்சின் தவாவின் வழியே கேட்ச் பிடிக்கிறார். இந்த சம்பவம் நிகழ்ந்ததும் சுற்றியிருப்பவர்கள் குதூகலித்து கைதட்டுகிறார்கள். மேலும், ஆம்லேட்டை கேட்ச் பிடித்ததும் ‘ஃப்ளிக் ஷாட்’ என சச்சின் கூறுவது பலரையும் ரசிக்க வைத்து வருகிறது. 

    இன்ஸ்டாகிராமில், இந்த காணொலியானது இதுவரை 4 இலட்சத்து 40 ஆயிரம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. 

    இதையும் படிங்க : விஜய், ஷாருக்கானுடன் பிறந்தநாள் கொண்டாடிய அட்லீ – எதிர்பார்ப்பை எகிற வைத்த வைரல் புகைப்படம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....