Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய், ஷாருக்கானுடன் பிறந்தநாள் கொண்டாடிய அட்லீ - எதிர்பார்ப்பை எகிற வைத்த வைரல் புகைப்படம்

    விஜய், ஷாருக்கானுடன் பிறந்தநாள் கொண்டாடிய அட்லீ – எதிர்பார்ப்பை எகிற வைத்த வைரல் புகைப்படம்

    ‘பிறந்த நாள் அன்று இதைவிட வேறென்ன நான் கேட்டுவிட முடியும்’ என்று பதிவிட்டபடி இயக்குநர் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான், ஜவான். ‘ஜவான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படமானது அடுத்த வருடம் ஜூன் மாதம் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஷாருக்கான் இறுதியாக நடித்த திரைப்படமான ஸீரோ 2018-ம் ஆண்டு வெளியானது. அதற்குப் பிறகு கடந்த நான்கு வருடங்களாக அவர் திரைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை. 

    ஷாருக்கான் நடித்த படங்கள் வரிசையாக படுதோல்வியினைச் சந்தித்திருந்த நிலையில், நல்ல கதைக்காக பல்வேறு இயக்குனர்களை அணுகி பேசி வந்துள்ளார். அப்போதுதான் அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாயின. கொரோனாவினால் படப்பிடிப்பு தாமதமான நிலையில், பின்பு படத்திற்கான டைட்டில் டீசர் வெளிவந்து ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. 

    இந்நிலையில், இயக்குநர் அட்லீ நேற்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால், சமூகவலைதளங்களில் அட்லீக்கு வாழ்த்து மழை குவிந்தது. இதையடுத்து, ஜவான் திரைப்பட அப்டேட்டுகள் ஏதும் வருமா என்று ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். 

    இப்படியொரு நிலையில்தான், அட்லீ தனது சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படம் ஒன்று அதிரிபுதிரியாக ட்ரெண்ட் ஆனது. ஆம்! நடிகர்கள் விஜய் மற்றும் ஷாருக்கான் உடன் ,தான் இருக்கும் படத்தை அவர் பகிர்ந்துள்ளார். மேலும், இந்த புகைப்படத்துடன் ‘பிறந்த நாள் அன்று இதைவிட வேறென்ன நான் கேட்டுவிட முடியும். அன்பான ஷாருக்கான் சார் மற்றும் என்னோட அண்ணன், என்னோட தளபதி விஜய்’ என அந்த படத்திற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் அட்லீ. இதனிடையே,  தளபதி விஜய் ‘ஜவான்’ திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ‘ஜவான்’ திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. 

    ஜவான் திரைப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இத்திரைப்படத்துக்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....