Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பயணம் வெவ்வேறு... ஆனால் இலக்கு தமிழ்நாடு; இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் கலக்கல் பதிவு...

    பயணம் வெவ்வேறு… ஆனால் இலக்கு தமிழ்நாடு; இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் கலக்கல் பதிவு…

    ஏ.ஆர். ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமான நிலையத்தில் இசைஞானியுடன் இருக்கும் காணொலியை பகிர்ந்துள்ளார்.

    இசை என்பதில் ஆனந்தம், துக்கம், அழுகை, ஆறுதல், வெற்றி, தோல்வி, காதல், நட்பு என உலகில் உள்ள அத்துனை உணர்வுகளும் அடங்கியுள்ளது.துயர சமயங்களில் ஏழை பணக்காரன் என்ற வித்யாசமெல்லாம் இல்லாமல் எல்லோரும் அவரவருக்கேற்ற பாடல்களை ஒலிக்கவிட்டு கேட்க்கொண்டுதான் இருப்பார்கள். இந்த பாடல் இவருக்குத்தான் என்று எப்படி யாராலும் சொல்ல முடியாதோ ,அதுபோலவே நம் உணர்வுகளையும் ஒரு கோப்பைக்குள் அடைத்து விட முடியாது .

    இப்படி சுருக்க முடியாத, ஒரு கோப்பைக்குள் அடைக்க முடியாத பாடல்களை பலர் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். நம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் பல இசையமைப்பாளர்கள் வெற்றிகரமாக இசையமைத்துக் கொண்டிருந்தாலும் இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் என இரு இசையமைப்பாளர்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியர்களுக்கே மிகவும் நெருக்கமானவர்கள். 

    எந்த காலக்கட்டத்திலும், இவர்கள் இருவருக்கும் இசைத்துறையில் ஒரு தனி இடம் இருக்கும். இவர்களின் பாடல்கள் இன்றளவும் எங்கெங்கும் ஒலிக்கவிடப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.இதோ! இந்த மழைக்காலத்திலும் பலரின் சமூக வலைதள பதிவுகள் ‘மழை, தேநீர், இளையராஜா (அல்லது) ஏ.ஆர்.ரஹ்மான்..பியூர் ப்ளிஸ்’ என்றபடியாகத்தான் இருந்தது, இருக்கிறது.

    இந்நிலையில், சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசைஞானி இளையராஜாவுடன் விமான நிலையத்திலிருந்தபடி ஒரு காணொலியை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் ‘ நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். இருப்பினும், எங்கள் இலக்கு எப்போதும் தமிழ்நாடு’ என்று ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார். 

     

    View this post on Instagram

     

    A post shared by ARR (@arrahman)

    இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்களால் ஏ.ஆர். ரஹ்மானின் இந்த பதிவு கொண்டாடப்பட்டு வருகிறது. 

    யுவனின் இசை மழையில் நனையத் தயாரா? – சென்னையில் இசைத் திருவிழா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....