Monday, March 18, 2024
மேலும்
  Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'கல்யாண தேதி குறிச்சாச்சு..பந்தக்காலும் நட்டாச்சு' - விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண அப்டேட்!

  ‘கல்யாண தேதி குறிச்சாச்சு..பந்தக்காலும் நட்டாச்சு’ – விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண அப்டேட்!

  நயன்- விக்கி திருமணம் குறித்த அப்டேட் தான் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக நயன் மற்றும் விக்னேஷ் சிவன் வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் காதல் வாழ்க்கை 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.

  இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருந்த ஒரு விஷயம். மேலும், நெற்றிக்கண் படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நயன்தாரா, தனக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தாக கூறியிருந்தார். விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறி இருந்தார்.

  பின்னர் இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்தப் படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருந்தது.

  அவ்வப்போது, விக்னேஷ் சிவன், தாங்கள் இருவரும் வெளியே செல்வது, சாப்பிடுவது, கோவிலில் வழிபடுவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில், சிறந்த லிரிஸிஸ்ட்கான விருதை பெற்றார் விக்னேஷ் சிவன். அப்போது மேடையில் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார் நிகழ்ச்சியின் தொகுப்பாளர். கூடிய விரைவில், அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறியிருந்தார்.

  விக்னேஷ் சிவன் – நயன்தாரா…

  தற்போது, இதுதான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண அழைப்பிதழ் என ஒரு புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. அதன் படி, சென்னை மகாபலிபுரத்தில் ஜூன் 9ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.திருமணத்தில் தென்னிந்திய சினிமா துறையின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்துக்கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

  இவர்களின் திருமணத்தில் தென்னிந்திய சினிமா துறையின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். தற்போது இவர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நயன்-விக்கி திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இவர்களின் திருமணத்தில் விக்னேஷ் சிவனின் நண்பர் விஜய் சேதுபதி, நயன்தாராவின் நெருங்கிய தோழியும், நடிகையுமான சமந்தா மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்.

  அது மட்டுமில்லாமல் இவர்கள் திருமணத்திற்கு 200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் விஐபிகள் 30 பேர் எனவும் அதில் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோர் இருக்கிறார்களாம். மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ஜுன் 9ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்தத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கிறது.

  முழுக்க முழுக்க பாரம்பரியமான முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களுடைய திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சென்று கொண்டு இருக்கிறது. அதில் நடக்கும் திருமணத்திற்கு மிகக் குறைவானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் திரையுலக பிரபலங்களை அழைத்து சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

  மேலும் விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்குகிறார் என சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதேபோல் நயன் O2, காட்பாதர், கனெக்ட்,லயன், திரில்லர் நயன் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இனி சுவரொட்டி ஒட்டக்கூடாது; அமலுக்கு வருகிறது புதிய சட்டம்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....