Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி சுவரொட்டி ஒட்டக்கூடாது; அமலுக்கு வருகிறது புதிய சட்டம்!

    இனி சுவரொட்டி ஒட்டக்கூடாது; அமலுக்கு வருகிறது புதிய சட்டம்!

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்த்து சென்னையை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென மாநகராட்சி ஆனையர் ககன்தீப் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

    பெருநகர சென்னை மாநகராட்சி தண்டையார் பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாநகராட்சி ஆணையர் ககன் தீப், துணை மேயர் மகேஷ் குமார், ராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், ஆர். கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். மண்டலம் 4ல் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் அவரவர் பகுதியில் உள்ள பிரச்சனைகளை முன்வைத்து, அதனை சரி செய்ய மேயரிடம் கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.

    கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, தண்டையார்பேட்டை மண்டலத்தை சென்னையின் மற்ற பகுதிகளை போலவே அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் கிடைக்கும் வகையில் மேம்படுத்திட கூடுதல் கவனம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். மேலும், பெருங்குடி போலவே கொடுங்கையூர் பகுதியிலும் பயோ மினிங் திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங், பக்கிங்காம் கால்வாய் பொறுத்தவரை ஆகாய தாமரையை அகற்ற மருந்து உபயோகித்தால் பிரச்சனைகள் வரும் என்பதால், அதனை உபயோக படுத்தாமல் இயந்திரங்கள் மூலமாகவே அகற்ற படுகிறது என்று கூறினார்.

    மேலும், பேருந்து நிழற்குடைகள், மாநகராட்சி கட்டடங்கள், பாலங்கள், தெரு பெயர் பலகைகள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகளால் மாநகரின் அழகே சீர்க்குலைந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து பொது சொத்துக்கள் மீது போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க கூறி இருக்கிறோம் எனவும் கூறினார்.

    சென்னை மாநகரை துாய்மையாக பராமரிக்க சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திடக்கழிவுகள் அகற்றுதல், சாலை மைய தடுப்புகளில் செடிகள் நட்டு அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகின் மிக நீளமான தாவரம் கண்டுபிடிப்பு! ஆச்சரியமடைந்த ஆராய்ச்சியாளர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....