Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்திரையரங்கை பிரித்து மேய்ந்து ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள்.. பரபரப்பு வீடியோ..

    திரையரங்கை பிரித்து மேய்ந்து ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள்.. பரபரப்பு வீடியோ..

    வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் ரிலீஸையொட்டி சென்னையின் பிரபல திரையரங்கில் இரு தரப்பு ரசிகர்களுக்கு இடையேவும் மோதல் ஏற்பட்டது. 

    தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித்குமாருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் என்பது அதிகளவில் உள்ளது. தனித்தனியாக இருவரின் திரைப்படங்கள் வெளிவரும்போதே, இருதரப்பு ரசிகர்களுக்கு இடையேவும் போட்டி நடைபெறும். 

    இந்நிலையில், நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும், நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் இன்று ஒரேநாளில் வெளியாகியுள்ளது. இதனால், பல திரையரங்குகளில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த கொண்டாட்டங்களின் போது சில சச்சரவுகளும் ஏற்பட்டன. 

    குறிப்பாக, சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான ரோகினியில், இரு தரப்பு ரசிகர்களுக்கிடையேவும் மோதல்கள் ஏற்பட்டன. இந்த மோதலில் அடிதடியும், விஜய் – அஜித் பேனர்களும் கிழிக்கப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலை தவிர்க்க திரையரங்கில் இருந்து அனைவரையும் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி வெளியேற்றினர்.

    இருப்பினும், பெரும்பாலானோர் வெளியேறவில்லை. ரோகினி திரையரங்குக்குள் ரசிகர்கள் நுழைய முற்பட்டனர். அப்போது காவல்துறையினரும், பவுன்சர்களும் ரசிகர்களை உள்ளே வராத வண்ணம் கண்ணாடி கதவுகளை தாங்கிப்பிடித்தனர். ஆனால், அதையும் மீறி ரசிகர்கள் கையில் கிடைத்த பொருட்களை திரையரங்கின் கண்ணாடி முகப்பை நோக்கி எரிந்தனர். இதனால் கண்ணாடிகளில் உடைப்பு ஏற்பட்டது. மேலும், ரசிகர்கள் திரையரங்கின் உள்ளே நுழையும்போது கதவுகளும், கண்ணாடி முகப்புகளும் உடைபட்டன. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. 

    இது சமந்தமாக தற்போது வெளிவந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    ஓடும் லாரியில் குத்தாட்டம் போட்ட அஜித் ரசிகர்; துணிவு கொண்டாட்டத்தில் உயிரிழப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....